கோவை: ஹிந்துஸ்தான் கல்லூரி மாணவன் கொலை வழக்கில் நீதி விசாரணை வேண்டும் என புதிய தமிழகம் கட்சி தலைவருக்கு கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.
கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள பொதிகை இல்லத்தில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கோவை மாவட்டத்தில் கல்லூரி மாணவர் அமுதன் அதே கல்லூரி மாணவர்களால் தாக்கி உயிரிழந்துள்ளது மிகுந்த வருத்தங்களை அளிக்கிறது என்றும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார். இந்த சம்பவம் தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள் கூடுதலாக உள்ளவர்களும் கைது செய்யப்பட வேண்டும் என்றார்.
கோவை மாவட்டம் கல்விக்கு முக்கிய அடையாளமாக உள்ளதாக கூறிய அவர் என்றும் காஸ்மா பாலிட்டர் என்று கூறும் கோவை மாவட்டம், அனைவரும் வாழ்ந்து வரும் மாவட்டம் வன்முறைகள் என்பது கோவையில் மிகவும் குறைவாக இருந்தது அமைதியின் சரணாலயமாக இருந்து வந்த மாவட்டம் அண்மை காலமாக இங்கு நடைபெறும் சம்பவங்களால் கோவையே பதற்றமாக மாறி வருகிறது என்றார்.
தற்போது மாணவர்கள் கொலை செய்ய கூடிய அளவிற்கு செல்கிறார்கள் என்றால் எங்கோ குறைபாடு உள்ளது பல கல்லூரிகள் போதை வஸ்துக்களின் இடமாக உள்ளது என்றும் உயர்நீதிமன்ற நீதிபதி, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்தால் தான் உண்மைகள் எல்லாம் தெரிய வரும் என்றார்.
அந்த ஹிந்துஸ்தான் கல்லூரியில் பல மாநிலங்களை சேர்ந்தவர்கள் உள்ளனர் என்றும் அவர்கள் ஊர்களுக்கு சென்று வரும் போது போதை பொருட்களை கொண்டு வருவதாக தகவல் வருகிறது என்றும் கூறிய அவர்
இதனை அலட்சியாக விட்டுவிட கூடாது என்றார். அமுதன் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஒரு வாரத்தில் ஏன் மீண்டும் கல்லூரியில் சேர்கிறார்? என்று கேள்வி எழுப்பிய கிருஷ்ணசாமி அவரை டிஸ்மிஸ் செய்திருக்க வேண்டியது தானே என்றார். மேலும் குற்றச்செயல்களில் போதை பொருட்கள் செயல்களில் ஈடுபடும் மாணவர்கள், ஆசிரியர்கள் யாராது இருந்தாலும் இரக்கம் காட்ட கூடாது என்றார்.மேலும் இந்த வழக்கில் நீதி விசாரணை வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஏற்கனவே சாதி பிரச்சனை வரும் போது ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு தலைமையில் குழு போட்டார்கள் ஆனால் அது முழுமையாக செயல்படவில்லை என்றார். கல்லூரிகளில் சினிமா பிரபலங்களை ஏன் அழைத்து வந்து விளம்பரம் செய்ய வேண்டும். அவர்கள் என்ன செய்கிறார்கள் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்களா என்று கேள்வி எழுப்பினார்.
அரசாங்கம் போதை விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்தாலும் ஏன் மாணவர்கள் இந்த நிலைக்கு செல்கிறார்கள்? அப்படி என்றால் ஏதோ இடத்தில் ஒரு கேப் உள்ளது என்றார். விழிப்புணர்வுக்கு ரீல்ஸ் போட்டால் எல்லாம் இதற்கு சரி வராது ஆக்க பூர்வமான செயல்பாடுகளை செய்ய வேண்டும் என்றார். மேலும் இந்த விவகாரத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் இதற்கு பதில் கூறுவது சரியானது அல்ல என்றும் முதல்வர் தான் பதில் அளிக்க வேண்டும் முதல்வர் மெளனம் காத்தால் எப்படி? என்று கேள்வி எழுப்பினார்.
போதை பொருட்கள் மட்டுமல்ல மதுவையும் ஒழிக்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்றும்
வேலியே பயிரை மேய்வதை போல் கல்லூரிகள் கல்வியைப்கமர்சியல் ஆக்க பார்க்கிறார்கள் என்றும் திறமைசாளிகளை உருவாக்காமல் அதிக பேர் படிக்கிறார்கள் என்ற பெருமையை தான் கல்லூரிகள் பார்க்கிறது என்றும்
கல்லூரி நிர்வாகம் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் பணத்தை மட்டும் பார்க்காமல் ஒழுக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
போதை பழக்க வழக்கங்கள் பள்ளி கல்லூரிகளில் சாதாரணமாக வந்துவிட்டது என்றும் போதை எதிராக தானே முதல்வர் மாரத்தான் போன்றவற்றை நடத்தினார் அவரும் விழிப்புணர்விற்கு ஓடினார் என்ற அவர் தமிழகத்தில் போதை பொருட்கள் புழக்கம் இருந்ததால் தானே முதல்வர் ஓடினார் முதல்வரை நாங்கள் கார்னர் செய்யவில்லை நடவடிக்கைகள் எடுங்கள் என்று தான் கூறுகிறோம் என்றார். மேலும் பள்ளிகளில் மாணவிகள் மது அருந்தும் வீடியோக்கள் எல்லாம் வருகிறதே என்ன செய்வது விசாரணை கமிஷன் போட்டு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனைகளை கேட்க வேண்டும் என முதல்வருக்கு வலியுறுத்தினார்.
30 நாட்களுக்குள் விசாரணை கமிஷன் வைத்து தீர்வு காணப்பட வேண்டும் என்றும் இந்த சம்பத்தை சமூக பிரச்சனையாக பார்க்க வேண்டும் அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்.





