அரசு பள்ளி பயின்று முன்னணி கல்வி நிறுவனங்களில் சேர்ந்த மாணாக்கர்கள்- நேரில் அழைத்து பாராட்டிய மாவட்ட ஆட்சியர்…

கோவை: அரசுப் பள்ளியில் பயின்று நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ள மாணாக்கர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அழைத்து பாராட்டினார்.

Advertisement

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அரசுப் பள்ளியில் பயின்று நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ள 36 மாணாக்கர்களையும், அவர்களது பெற்றோர்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் நேரில் அழைத்து பாராட்டினார். மேலும், 48 மாணவ மாணவியர்களுக்கு ஜிடி தொண்டு நிறுவனம் (GD TRUST) சார்பில் ரூ.10.22 இலட்சம் காசோலைகளை வழங்கி ஊக்குவித்தார்.

இந்நிகழ்வில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா, GD TRUST தலைவர் அஞ்சனகுமார். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் மூர்த்தி, உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது, அரசுப் பள்ளியில் பயின்று நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ள 36 மாணாக்கர்கள் மற்றும் அவர்களது பெற்றோரை நான் மனமார பாராட்டுகிறேன். உங்களது இந்த வளர்ச்சி உங்களுக்கு பின்வரும் மாணவ மாணவியர்களை பின்பற்ற செய்யும்.

Advertisement

நமது மாவட்டத்தை பொறுத்தவரை 2025 2026 ஆம் கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களில் 1,353 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10,790 பேர் உயர்கல்வியில் சேர்க்கை பெற்றுள்ள நிலையில், 10,569 பேர் உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர். இதன் மூலம் 10-ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மற்றும் தேர்ச்சி பெறாத மாணாக்கர்கள் என ஏறக்குறைய 98 சதவீதம் பேர் உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர்.

உயர்கல்வியில் சேர்க்கை பெற்று மாநில அளவில் முதலிடத்தில் நமது மாவட்டம் திகழ்கிறது. மேலும், உயர்வுக்குப்படி சிறப்பு முகாம் மூலம் 386 மாணவர்கள் நேரடி சேர்க்கை பெற்றுள்ளனர்.

Advertisement

இந்நிகழ்ச்சியில் மட்டும் ஜிடி தொண்டு நிறுவனம் (GD TRUST) மூலம் 48 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.10.22 இலட்சம் கல்வி உதவித்தொகைக்கான காசோலைகள் வழங்கப்படுகிறது. இந்த கல்வியாண்டில் மட்டும் ஜிடி தொண்டு நிறுவனத்தின் சார்பில் நடைபெறும் 3 வது நிகழ்வு இதுவாகும்அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்.

மேலும், நமது மாவட்டத்தில் இன்னும் உயர்கல்வியில் சேராத மாணாக்கர்களை கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் கல்வித்துறை அலுவலர்கள் கண்டறிந்து, அவர்களை உயர்கல்வியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

தண்ணீர்பந்தல் கொடிசியா சாலையில் போக்குவரத்து மாற்றம்- விவரங்கள் இதோ…

கோவை: கோவை தண்ணீர் பந்தல் கொடிசியா சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. கோவை மாநகர் தண்ணீர்பந்தல் S-bend சந்திப்பு முதல் கொடிசியா சாலையிலுள்ள மின்சார அலுவலகம் வரையுள்ள சாலையில், வருகின்ற 19.08.2026 ஆம் தேதி...

Video

பொள்ளாச்சியில் ஹெல்மெட்டை திருடிய ஜோடி- சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் இருந்து ஹெல்மட்டை நூதனமாக திருடி செல்லும் இளம் பெண்ணின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி உடுமலைப்பேட்டை சாலையில் இருசக்கர வாகனத்தில் ஒரு இளைஞரும்...