மாஞ்சோலை மேகமலை மக்களை வெளியேற்றினால் அடுத்த குறி வால்பாறை குன்னூர் தான்- டாக்டர் கிருஷ்ணசாமி…

கோவை: மாஞ்சோலை மேகமலை மக்களை வெளியேற்றினால் அடுத்து வால்பாறை குன்னூர் மக்கள் தான் என்று கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

Advertisement

கோவை குனியமுத்தூர் பகுதியில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். மாஞ்சோலை மற்றும் மேகமலை மலைவாழ் மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறி இருப்பது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

இதுகுறித்து பேசிய கிருஷ்ணசாமி மாஞ்சோலை மற்றும் மேகமலை மலைவாழ் மக்கள் அந்த மலையை நம்பி வாழ்வாதாரத்தை ஈட்டி வருவதாகவும் அவர்களை வெளியேற்றுவது சரியானது அல்ல என்று குறிப்பிட்டு இது தொடர்பாக 21 ஆம் தேதி திருநெல்வேலியில் அனைத்து கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதாக தெரிவித்தார். இதில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் தமிழ்நாடு அரசாங்கம் 2006ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட வன உரிமை சட்டத்தை தற்பொழுது வரை அமல்படுத்தவில்லை என்றும் ஆனால் அந்த சட்டம் கேரளா ஒரிசா போன்ற பல்வேறு மாநிலங்களில் செயல்பாட்டில் உள்ளது என்று தெரிவித்தார். மேலும் வன உரிமை சட்டம் குறித்து மாநில அரசும் பேசுவது இல்லை அவ்வாறு பேசும் பட்சத்தில் உச்ச நீதிமன்றம் அதனை கவனத்தில் எடுத்துக் கொள்ளும் எனவும் தெரிவித்தார்.

Advertisement

தற்பொழுது மாஞ்சோலை மற்றும் மேகமலை மக்களை வெளியேற்றுவதற்கு அனுமதி கொடுத்தால் அடுத்து வால்பாறை குன்னூர் ஆகிய பகுதி மக்களை தான் வெளியேற்றுவதற்கு வாய்ப்பு இருப்பதாக சுட்டிக் காட்டிய அவர் ஏழை எளிய மக்களை வெளியேற்றக் கூறும் அதே சமயம் ரிசார்டுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுவதாக கூறினார்.

வால்பாறையில் எல்லாம் தேயிலை தோட்டங்களை அழித்தும் யானை வழித்தடங்களை அழித்தும் ரிசார்ட்டுகள் கட்டப்பட்டு வருவதாகவும் மலைப்பகுதிகளில் வசதியானவர்கள் உல்லாசமாக இருப்பதற்கு மட்டும் அனுமதி வழங்கப்படுவதாகவும் கேள்வி எழுப்பி குற்றம் சாட்டினார்.

Advertisement

மேலும் அரசாங்கம் ரிசார்டுகள் விவகாரத்தில் உண்மையை சொல்ல தயங்குவதாகவும் அதற்கு அவர்களும் வினாமியாக இருக்கலாம் என்று கூறினார் வனத்துறை சட்டம் குறித்து இங்கு புரிதல் இல்லை என்று சாடிய அவர் அதிகாரிகள் இதனை சரியாக அரசுக்கு எடுத்து சொல்ல வேண்டும் என்று தெரிவித்தார்.

மேகதாதுவில் தமிழகத்திற்கு அருகிலேயே அணைக்கட்டும் பட்சத்தில் தற்பொழுது அவர்கள் திறந்து விடும் தண்ணீர் கூட கிடைப்பதற்கு வாய்ப்பு இல்லை என்றும் காவிரி நீர் தமிழகத்திற்கு வரும் வாய்ப்பு குறைந்து விடும் எனவே முதலமைச்சர் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டங்களை கூட்டி மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் முதல்வர் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மேகதாது அணை தொடர்பாக குரல் எழுப்பிக் கொண்டே இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

தற்பொழுது எம்எல்ஏக்களுக்கு அரசு சார்பில் கார்கள் உதவியாளர் வழங்கப்படுவது குறித்தான கேள்விக்கு அரசு கஜானா காலியாக இருக்கிறது என்று கூறும்பொழுது எங்கிருந்து இதற்கான பணம் வருகிறது என்பதை அவர்கள் தான் சொல்ல வேண்டும் என்று தெரிவித்தார்.

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கரூர் கம்பெனி என்னிடம் பேக்கேஜ் பேசினார்கள்- MLA கனிமொழி ஓபன் டாக்…

கோவை: கரூர் கம்பெனி என்னிடம் பேக்கேஜ் பேசிய ஆதாரங்கள் எல்லாம் உள்ளது என்று எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் தெரிவித்துள்ளார். கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் TVK 100 நாள் சாதனை விளக்கக் கூட்டம் கவுண்டம்பாளையம் சட்டமன்ற...

Video

காவல் நிலையம் அருகே உள்ள கோவிலில் கைவரிசை- கோவையில் அரங்கேறிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில், காவல் நிலையம் அருகே உள்ள உண்டியலை உடைத்து திருடிய மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலையம் அருகே அமைந்து இருக்கும் பிரபல ஸ்ரீ...