நஞ்சேகவுண்டன்புதூரில் இந்துக்களின் மயானத்தை குப்பைக்கிடங்காக மாற்றுவதா?

கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள மயானத்தில் திடக்கழிவு மேலாண்மை மையம் அமைப்பதற்கு இந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அந்த பகுதியில் தோண்ட தோண்ட மனித உடல்களின் பாகங்கள் வருவது இந்துக்களின் உணர்வை புண்படுத்தும் வகையில் உள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Advertisement

கோவை நஞ்சேகவுண்டன்புதூர் பகுதியில் இந்து மக்களின் உடல்களை புதைக்கும் மயானம் உள்ளது.

இந்த மயானத்தில் கோவை மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை மாநகராட்சி நிர்வாகம் தொடங்கியுள்ளது.

இதற்கு நஞ்சேகவுண்டன் புதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

இதனிடையே மாநகராட்சியின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியினர் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இதனை தொடர்ந்து இந்து முன்னணி மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் சதீஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

Advertisement

“மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்களிடம் எந்த ஆலோசனைகளையும் கேட்காமல் தன்னிச்சையாக இந்த முடிவை செய்துள்ளது. தற்போது திடக்கழிவு மேலாண்மை மையம் அமைக்கும் இடத்தில் குழிகள் தோண்டப்பட்டு வருகின்றன. அப்போது அங்கு புதைக்கப்பட்ட உடல்களின் பாகங்கள் வெளியே வருகின்றன. இது மனவேதனையை ஏற்படுத்துகிறது. இந்துக்களின் உணர்வுகளையும் புண்படுத்துகிறது.

எனவே மாநகராட்சி நிர்வாகம் இந்த நடவடிக்கையை உடனடியாகக் கைவிட வேண்டும்.” என்றார்.

கோவை நஞ்சேகவுண்டன்புதூர் மயானத்தில் திடக்கழிவு மேலாண்மை மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கரூர் கம்பெனி என்னிடம் பேக்கேஜ் பேசினார்கள்- MLA கனிமொழி ஓபன் டாக்…

கோவை: கரூர் கம்பெனி என்னிடம் பேக்கேஜ் பேசிய ஆதாரங்கள் எல்லாம் உள்ளது என்று எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் தெரிவித்துள்ளார். கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் TVK 100 நாள் சாதனை விளக்கக் கூட்டம் கவுண்டம்பாளையம் சட்டமன்ற...

Video

காவல் நிலையம் அருகே உள்ள கோவிலில் கைவரிசை- கோவையில் அரங்கேறிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில், காவல் நிலையம் அருகே உள்ள உண்டியலை உடைத்து திருடிய மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலையம் அருகே அமைந்து இருக்கும் பிரபல ஸ்ரீ...