கோவை: கோவையில் குரூப் 2/2a தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2026 ஆம் ஆண்டுக்கான குரூப் 2/2a தேர்வுக்கான அறிவிப்பினை 11.08.2026 அன்று வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பில் குரூப் 2 பதவிகளுக்கு 41 பணியிடங்களும் குரூப் 2ஏ பதவிக்கு 780 காலிப்பணியிடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 09.09.2026 என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு கோயம்புத்தூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 01.09.2026 அன்று காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது
பயிற்சி வகுப்பின் சிறப்பம்சங்கள் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் பயிற்சி, போட்டித் தேர்வு புத்தகங்கள் அடங்கிய நூலக வசதி, பாடவாரியான தேர்வுகள் & முழு மாதிரித் தேர்வுகள், இலவச பாடக் குறிப்புகள், Study hall வசதிகள் ஆகியவை உள்ளன.
இது தவிர கோவை மாவட்டத்தில் TNPSC தேர்வுகளுக்கு பயிற்சி பெற்று வரும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் இலவச மாதிரித்தேர்வுகள் ஆகஸ்ட் 25 செப்டம்பர் 01, 08, 15, 22, 29, அக்டோபர் 06, 13, 27 ஆகிய தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பயிற்சி வகுப்பு மற்றும் மாதிரித் தேர்வில் கலந்துகொள்ள விரும்பும் போட்டித்தேர்வு ஆர்வர்லர்கள் மேட்டுப்பாளையம் ரோடு கவுண்டம்பாளையம் அடுத்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரடியாகவோ அல்லது 9361576081 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.





