மிலாடி நபி- கோவையில் 20,000 க்கும் மேற்பட்ட மக்களுக்கு இலவச நெய் சோறு…

கோவை: மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்பட்டு இலவசமாக மக்களுக்கு வழங்கப்பட்டது.

Advertisement

இஸ்லாமியர்களின் இறைத்தூதராக கருதப்படும் நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை மிலாடி நபியாக கொண்டாடி வருகின்றனர். இன்றைய தினம் நபிகள் நாயகத்தின் புகழையும் ஈகை பண்பையும் பொதுமக்களிடையே எடுத்துரைக்கும் என்னும் பல்வேறு நிகழ்வுகள் ஒருங்கிணைக்கப்படும்.

இன்றைய தினம் ஏழை எளிய மக்களின் பசியை ஆற்ற வேண்டும் என்பது இஸ்லாமியர்களுக்கு அளிக்கப்பட்ட உத்தரவாக கருதப்படுகிறது. அதன்படி பல்வேறு பகுதிகளில் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் தப்ருக் எனப்படும் உணவு வழங்கும் நிகழ்வு நடைபெற்று வருகின்றன.

கோவையில் உக்கடம் ஜி.எம் நகர் பகுதியில் சுன்னத் ஜமாத் சார்பில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உண்ணும் அளவிற்கு நெய் சோறு சமைக்கப்பட்டு இலவசமாக வழங்கப்பட்டது.

Advertisement

ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக வரிசை அமைக்கப்பட்டு காலை முதலே உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதனை அப்பகுதி மக்கள் மட்டுமல்லாமல் சுற்றுப்புற பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் வருகை புரிந்து வாங்கி செல்கின்றனர்.

கடந்த பத்து ஆண்டுகளாக சுன்னத் ஜமாத் சார்பில் இலவசமாக நெய் சோறு வழங்கப்பட்டு வரும் நிலையில் 11 வது ஆண்டாக இன்றும் வழங்கப்பட்டு வருகிறது. சுமார் 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

ஆகஸ்ட் 26 ராசிபலன்: இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்? 12 ராசிகளுக்கான முழு பலன்கள்!

ஆகஸ்ட் 26, 2026 அன்று 12 ராசிக்காரர்களுக்கும் நாள் எப்படி அமையும்? தொழில், பணம், குடும்பம், ஆரோக்கியம் உள்ளிட்ட முக்கிய பலன்களை இங்கே காணலாம்.

Video

காவல் நிலையம் அருகே உள்ள கோவிலில் கைவரிசை- கோவையில் அரங்கேறிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில், காவல் நிலையம் அருகே உள்ள உண்டியலை உடைத்து திருடிய மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலையம் அருகே அமைந்து இருக்கும் பிரபல ஸ்ரீ...