மேட்டூர் அணை திறப்பு எப்போது?- அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பதில்…

கோவை: மேட்டூர் அணை திறப்பு தேதியை முதல்வர் அறிவிப்பார் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Advertisement

கோவை விமான நிலையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஓணம் பண்டிகை அண்டை மாநிலமான கேரள மாநிலத்தில் கொண்டாடப்பட்டாலும் தமிழகத்தில் வாழக்கூடிய ஓணம் பண்டிகை கொண்டாடும் மக்களுக்கு தமிழக முதல்வர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளார் என தெரிவித்தார்.

சட்ட மன்றத்தில் அமைச்சர் பிரபு காணாமல் போன மலைகள் குறித்து பட்டியலை வெளியிட்டது தொடர்பான கேள்விக்கு, அதற்கான உரிய சட்டங்கள் இயற்றப்படும் என்றும் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார். மேலும் அதற்காகத்ப்தான் நேற்று இது குறித்து கேட்கின்ற பொழுது தெளிவாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு பணிக்காக எத்தனை யூனிட் எடுக்கப்பட்டது? எடுக்கப்படும் இடத்தில் என்ன வரிகள்
கட்டப்படுகிறது? என்றும் 18 மலைகள் காணாமல் போய் உள்ளதாக கூறியிருக்கிறார்கள் இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

தமிழகத்தை பொறுத்தவரை இயற்கை வளங்கள் காக்கப்பட வேண்டும் அதற்காக தான் அண்டை நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யலாமா என்று நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது என்றார். மேலும் அண்டை மாநிலமான கேரளா மாநிலத்திற்கு 20 நாட்களுக்கு முன்பே ஆணை பிறப்பிக்கப்பட்டு ஜல்லி மணல் ஆகியவை கொண்டு செல்லப்படுவதை தற்காலிகமாக அரசு நிறுத்தி வைத்துள்ளது என்று தெரிவித்தார்.

Advertisement

உங்கள் கட்சிக்காரர்களை விலை கொடுத்து வாங்க முடியாதா? என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருப்பது தொடர்பான கேள்விக்கு அவருடைய நிலையும் எண்ணமும் வேறு அதனால் தான் பலரும் வெளியில் வந்தார்கள் என்றும் திமுகவோடு இணைந்து முதல்வர் பொறுப்பை ஏற்க வேண்டும் என்ற நிலை வந்த பொழுது தான் இந்த நிலை ஏற்பட்டதாக தெரிவித்தார்.

இந்த சட்டசபை வந்த பிறகு அவை குறிப்பில் இருந்து பல்வேறு குறிப்புகள் நீக்கப்படுவது தொடர்பான கேள்விக்கு, இதுபோன்று எப்பொழுதும் நடைபெறும் என்பதை நான் அறிவேன் பல நாட்களில் முழுமையாக கூட நீக்கப்பட்டு இருக்கிறது என்றும் தற்பொழுது சட்டமன்றத்தில் பேசிய பிறகு தான் நீக்கப்படுகிறது என்ற அவர் அவை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் காரணத்தினால் மக்கள் பார்க்கிறார்கள் என்று தெரிவித்தார்.

Advertisement

சட்டமன்ற பதிவேட்டில் நீக்கப்பட்டவை இருக்கக் கூடாது என்பதுதான் மரபு என்றும் அந்த மரபின் அடிப்படையில் சட்டப்பேரவைத் தலைவர் எல்லோரும் பாராட்டுகின்ற வகையில் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.

சட்டப்பேரவை நிகழ்வுகள் ரீல்ஸ் மூலம் சமூக வலைதளங்களில் பரவுவது தொடர்பான கேள்விக்கு, செய்தித் துறை அமைச்சர் அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வார் படிப்படியாகத்தான் ஒவ்வொன்றிலும் அரசு நடவடிக்கை எடுக்க முடியும் ஏனென்றால் ஒரு பிரச்சனை வருவதற்கு முன்பு அது தெரிவதற்கு வாய்ப்பில்லை.

சமூக வலைத்தளங்கள் பலரது கையில் உள்ளது எனவே அதனை எவ்வாறு முறைப்படுத்துவது என்பதை சட்டப்பேரவை தலைவர் செய்தித் துறையுடன் கலந்து முறைப்படுத்துவார் என்று தெரிவித்தார்.

மேட்டூர் அணை திறப்பு குறித்து முதல்வர் தற்பொழுது வரை தேதி அறிவிக்கவில்லை என்றும் முதல்வர் தான் அதனை அறிவிப்பார் என்றும் அறிவிப்புக்கு பிறகு அதைப் பற்றி பேசுகிறேன் என்று தெரிவித்தார்.

மலைகளைக் காணவில்லை என்று ஆதாரத்துடன் அமைச்சர் வெளியிடும் பொழுது எதிர்க்கட்சியினர் கூச்சல் போடாமல் அமைதியாக இருந்தது குறித்தான கேள்விக்கு, ஆதாரத்துடன் வெளியிடும் பொழுது யார் அதற்கு உடந்தையாக இருந்தார்கள் என்பதைத்தான் காண வேண்டும் அதனால் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அனைத்தும் பினாமி பெயரில் தான் உள்ளது என்றும் அமைச்சர் கூறியிருக்கிறார் அது பற்றி போக போக தான் தெரியும் என்று தெரிவித்தார்.

ஜி ஸ்கொயர் விவகாரம் குறித்து வேலுமணி கூறுவார் என்று தெரிவித்து சென்றார்.

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Video

காவல் நிலையம் அருகே உள்ள கோவிலில் கைவரிசை- கோவையில் அரங்கேறிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில், காவல் நிலையம் அருகே உள்ள உண்டியலை உடைத்து திருடிய மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலையம் அருகே அமைந்து இருக்கும் பிரபல ஸ்ரீ...