கோவை: கோவை மாவட்ட அளவிலான Coimbatore District Silambam Championship 2026–2027 போட்டி கற்பகம் கல்லூரியில் நடைபெற்றது.
இதில் SMV சிலம்பம் அகாடமியில் பயிற்சி பெற்று வரும் 3-ஆம் வகுப்பு மாணவி மானசா, சிறப்பாக சிலம்பம் விளையாடி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
சிறு வயதிலேயே தமிழர்களின் பாரம்பரிய வீரக்கலையான சிலம்பத்தில் ஆர்வம் கொண்டு பயிற்சி பெற்று, மாவட்ட அளவிலான போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ள மானசாவுக்கு SMV சிலம்பம் பயிற்சி சாலை பயிற்சியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
மானசாவின் இந்த சாதனை, இளம் தலைமுறையினர் சிலம்பம் போன்ற பாரம்பரிய விளையாட்டுகளில் ஆர்வம் கொள்ளும் வகையில் ஊக்கமளிக்கும் விதமாக அமைந்துள்ளது.
மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று மேலும் பல வெற்றிகளைப் பெற வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.




