கோவை: இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் மாணவ மாணவியருக்கான மத்திய அரசின் கல்வி உதவித்தொகைத் திட்டம் (PM YASASVI) அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசால் இதர பிற்படுத்தப்பட்டோர் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் மற்றும் சீர்மரபினர் மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் (PM.YASASVI Top class education in schools for OBC, EBC & DNT students) செயல்படுத்தப்பட்டு வருகிறது.
2026 – 2027 ஆம் ஆண்டிற்கு தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (National Scholarship Portalஅறிவிக்கப்பட்டுள்ள (Top class Schoolசிறந்த செயல்பாடு கல்வி நிறுவனம் 100% தேர்ச்சி பெற்றுள்ள பள்ளிகளில் நடப்பாண்டில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் தமிழகத்தைச் சார்ந்த தகுதியான மாணவ மாணவியர்கள் கல்வி உதவித்தொகை (புதுப்பித்தல் புதியது) திட்டத்தில் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (httpsscholarships.gov.in) விண்ணப்பிக்கலாம்.
இத்திட்டத்தில் கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணமாக ஆண்டொன்றுக்கு அதிகபட்சமாக 9 10 ஆம் வகுப்பு பயில்பவருக்கு ரூ.75,000மற்றும் 1112 ஆம் வகுப்பு வரை பயில்பவருக்கு ரூ.125,000/வரை கல்வி உதவித்தொகையாக ஒன்றிய அரசால் வழங்கப்படும். 30% மாணவியர்களுக்கு இத்திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான நிபந்தனைகள், மாணவ,மாணவியர்கள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC), பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் (EBC) அல்லது சீர்மரபினர் (DNT) பிரிவைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். வருமான வரம்பு குடும்பத்தின் மொத்த ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
2025-26 ஆம் கல்வியாண்டில் 100 தேர்ச்சி பெற்று தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ள பள்ளிகளில் பயில்பவராக இருத்தல் வேண்டும்.
இதற்கான புதுப்பித்தலுக்கு, இத்திட்டத்தில் கடந்த நிதியாண்டில் 2025-26) கல்வி உதவித்தொகை பெற்று பயனடைந்த மாணவமாணவியர்கள் நடப்பாண்டில் (2026-27) 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு விண்ணப்பத்தினை தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் உறுதி செய்து (National Scholarship Portal https//scholarshipsgov.in) புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை படிவத்தை இணைப்பில் பூர்த்தி செய்து விண்ணப்பிக்குமாறும் இணையத்தில் பூர்த்தி செய்யப்பட்டுள்ள விண்ணப்பங்களை தத்தம் பள்ளி தலைமை ஆசிரியர் விண்ணப்பங்கள் சரிபார்ப்பதற்கான (புதுப்பித்தல் for renewal கடைசி நாள் 15.09.2026 ஆகும்.
2026-27 ஆம் ஆண்டு புதியதாக விண்ணப்பிக்க விரும்பும் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் பயிலும் தகுதியுள்ள மாணவ மாணவியர்களுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதி NSP இணையதளத்தில் அறிவிக்கப்படும்.
மேலும் இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்கள் அறிந்திட National Scholarship Portal (http://scholarships.gov.in) மற்றும் மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணையதளத்தினை அறிந்துக் கொள்ளலாம். தகுதியான மாணவமாணவியர்கள் இத்திட்டத்தில் ஆட்சித்தலைவர் விண்ணப்பித்து மாவட்ட பயனடையுமாறு பவன்குமார் தெரிவித்துள்ளார்.





