TNAU, அண்ணாமலை பல்கலைக்கழக இளமறிவியல் துணை கலந்தாய்வு அறிவிப்பு…

கோவை: வேளாண் பல்கலையில் ஒருங்கிணைந்த இளமறிவியல் மாணவர் சேர்க்கை 2026-2027 துணைக் கலந்தாய்விற்கான இணையதள விண்ணப்பம் திறக்கப்பட உள்ளது.

Advertisement

2026-27ஆம் கல்வியாண்டிற்கான தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU) மற்றும் வேளாண்மைப் பிரிவு, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் (AU) ஆகியவற்றில் வழங்கப்படும் பட்டப்படிப்பு (UG) மற்றும் பட்டயப்படிப்புகளுக்கு (Diploma) ஏற்கனவே விண்ணப்பிக்க தவறியவர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்க ஏதுவாக துணைக் கலந்தாய்விற்கான இணையதள விண்ணப்பம் 05.09.2026 முதல் 07.09.2026 வரை ( மூன்று நாட்கள் வரை) தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இணையதள முகப்பில் திறக்கப்பட உள்ளது.

http://tneu.ucanepply.com என்ற இணையத்தளத்தில் 05.09.2026 முதல் 07.09.2026 வரை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பக் கட்டணம் பொதுப்பிரிவு(OC)பிற்படுத்தப்பட்டோர் BC)பிற்படுத்தப்பட்டோர் (இஸ்லாமியர்) BC(M) மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் MBC/DNC மாணவர்களுக்கு ரூபாய் 600/- ஆதிதிராவிடர் (SC)அருந்ததியர் (SCA) மற்றும் பழங்குடியினர் (ST) ரூபாய் 300/- ஆகும்.

பட்டயப்படிப்புகளுக்கான விண்ணப்பக் கட்டணம் பொதுப்பிரிவு (OC), பிற்படுத்தப்பட்டோர் (BC) மற்றும் பிற்படுத்தப்பட்டோர் (இஸ்லாமியர்) (BCM) மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் MBC/DNC) மாணவர்களுக்கு ரூபாய்.200/-மற்றும் ஆதிதிராவிடர் (SC), அருந்ததியர் (SCA) மற்றும் பழங்குடியினர் (ST) ரூபாய். 100/- ஆகும்.

Advertisement

துணைக் கலந்தாய்விற்கு விண்ணப்பிப்பதற்கான விதிமுறைகள் உள்ளன. அதன்படி துணைத்தேர்வின் மூலம் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
துணைக்கலந்தாய்விற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கென்று தனி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்

ஏற்கனவே, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பித்து தரவரிசை பட்டியலில் இடம் பெற்ற மாணவர்கள் மீண்டும் துணை கலந்தாய்விற்கு விண்ணப்பிக்க தேவையில்லை அவ்வாறு விண்ணப்பித்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பொது விண்ணப்பித்தினை இடைநிறுத்திய மற்றும் சமர்பிக்காத மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Advertisement

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கு ஏற்கனவே விண்ணப்பிக்காத மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பொது விண்ணப்பித்திற்கு விண்ணப்பித்து தரவரிசை பட்டியலில் இடம்பெற்று ஆனால் கலந்தாய்வு கட்டணம் செலுத்தாத மாணவர்கள் விண்ணப்பிக்க கூடாது. விதிமுறைகளை மீறி விண்ணப்பித்தால் அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்

பொதுக்கலந்தாய்விற்கு பிறகு பெறப்பெற்ற காலியிடங்கள் இந்த துணைக் கலந்தாய்வின் மூலம் விண்ணப்பித்த மாணவர்களைக் கொண்டு நிரப்பப்படும். இந்த துணைக் கலந்தாய்விற்கு விண்ணப்பித்த மாணவர்கள் அதிக கூட்டு மதிப்பெண் பெற்றிருந்தாலும் அவர்கள் பொதுக் கலந்தாய்விற்கு பிறகு உருவான காலியிடங்களுக்கு மட்டுமே உரிமை கோர முடியும் .

இந்த கலந்தாய்விற்கு தகவல் கையேட்டில் கொடுக்கப்பட்டுள்ள சேர்க்கை விதிமுறைகள் பின்பற்றப்படும். இந்த துணை கலந்தாய்விற்கு மாணவர்கள் ஏதேனும் தவறான தகவல்களை வழங்கினாலோ அல்லது குறிப்பிட்ட விதிமுறைகளை மீறினாவோ அவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். மாணவர்கள் விரும்பினால் இந்த இணையதளம் வாயிலாக பட்டப்படிப்பு
(UG) மற்றும் பட்டயப்படிப்புகளுக்கு (Diploma) தனித்தனியாக விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயமுத்தூர்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக சுல்வி பாடங்களுக்கான விவரங்களை 9488635077, 9486425076 ugadmissions@tnau.ac.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும் வாரநாட்களில் காலை 9.00 மணியிலிருந்து மாலை 5 மணிவரை தொடர்புகொள்ளலாம்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் (வேளாண்மைப் பிரிவு)
அண்ணாமலைப் பல்கலைக்கழக கல்வி பாடங்களுக்கான விவரங்களை 9865703537 என்ற அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் (emal): agridean2015@gmaill.com மூலம் தொடர்புகொள்ளலாம்.

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

மலைவாழ் மக்களின் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு! கோவையில் சிறப்பு கண்காட்சி!

கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் 162 ஸ்டால்களுடன் சிறப்பு கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் மலைவாழ் மக்கள் மற்றும் பெண்கள் தயாரிக்கும் இயற்கைப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளன.

Video

தொழிலாளர்கள் கொட்டகையை சேதப்படுத்திய காட்டுயானை- கோவை அருகே பரபரப்பு…

கோவை: கட்டிட தொழிலாளர்கள் தங்கியிருந்த தகர கொட்டகையை சேதப்படுத்திய ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை துடியலூர் அடுத்துள்ள கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று நள்ளிரவில் குடியிருப்புக்குள் புகுந்து வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த...