கோவையில் வாகனங்களால் சாலையை கடக்க காத்திருந்த யானை கூட்டம்…

கோவை: வாகனங்களால் காத்திருந்து சாலையைக் கடந்த யானைக் கூட்டத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.

Advertisement

வாகனங்களால் பொறுமையாக காத்திருந்து குட்டிகளுடன் சாலையைக் கடந்த யானை கூட்டம், சாலையை கடக்கும் வரை காத்திருந்த வாகன ஓட்டிகளின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.

கோவை மேற்கு தொடர்ச்சி மலை ஆனைகட்டி பகுதியில் சிறுத்தைகள், காட்டுயானைகள் என பல்வேறு வனவிலங்குகள் உள்ளன.

ஆனைகட்டி செல்லும் சாலை மலைப்பாதை என்பதாலும் எப்பொழுது வேண்டுமானாலும் வனவிலங்குகள் சாலையை கடக்கக்கூடும் என்பதாலும் வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடனே செல்ல வேண்டும் என்று வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

இந்நிலையில் நேற்று இரவு ஆனைகட்டி சாலையில் குட்டிகளுடன் 10க்கும் மேற்பட்ட யானைகள் சாலையை கடக்க முற்பட்ட போது அங்கு வாகனங்கள் தொடர்ச்சியாக வந்துள்ளதால் யானை கூட்டம் சாலையோரம் காத்திருந்துள்ளது.

அதனைப் பார்த்த வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்தியதை தொடர்ந்து யானைகள் சாலையை கடந்து சென்றுள்ளன. அவை கடந்து செல்லும் வரை வாகன ஓட்டிகளும் காத்திருந்துள்ளனர்.

Advertisement

தற்பொழுது அந்த வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

மலைவாழ் மக்களின் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு! கோவையில் சிறப்பு கண்காட்சி!

கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் 162 ஸ்டால்களுடன் சிறப்பு கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் மலைவாழ் மக்கள் மற்றும் பெண்கள் தயாரிக்கும் இயற்கைப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளன.

Video

தொழிலாளர்கள் கொட்டகையை சேதப்படுத்திய காட்டுயானை- கோவை அருகே பரபரப்பு…

கோவை: கட்டிட தொழிலாளர்கள் தங்கியிருந்த தகர கொட்டகையை சேதப்படுத்திய ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை துடியலூர் அடுத்துள்ள கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று நள்ளிரவில் குடியிருப்புக்குள் புகுந்து வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த...