கோவை: பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினருக்கு கடன் உதவி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
டாப்செட்கோ எனப்படும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் மூலம் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் வகுப்பை சார்ந்தவர்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் ஆட்டுப்பண்ணை, ஹோட்டல், ஜவுளிக்கடை போன்ற தொழில்களுக்கு தனிநபர் கடன், சுயஉதவிக் குழுக்களுக்கான சிறுதொழில் கடன் மற்றும் வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் உயர்கல்வியை மேற்கொள்வதற்காக கல்விக் கடன் ஆகிய கடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட வருகின்றது.
டாப்செட்கோ கடன் திட்டத்திற்கான லோன் மேளா வருகின்ற 07.09.2026 அன்று கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டரங்கில் காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் சாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ஆதார் அடையாள அட்டை, நகல் புகைப்படம் மற்றும் திட்ட தொழில் அறிக்கை ஆகிய ஆவணங்கள் கட்டாயம் உடன் கொண்டு வர வேண்டும்.
எனவே, இம்மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோர். மிக பிற்படுத்தப்பட்டோர்சீர் மரபினர் வகுப்பைச் சார்ந்த தனிநபர்கள், குழுக்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் லோன் மேளாவில் கலந்துக்கொண்டு பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் கிரியப்பனவர் தெரிவித்துள்ளார்.




