ஒரே பதிவு எண்; வைரலான வீடியோ… வசமாக சிக்கிய 2 பைக்குகள்- போலீஸ் அதிரடி

கோவை: கோவை கவுண்டம்பாளையத்தில் ஒரே பதிவு எண்ணுடன் 2 பைக்குகள் இயக்கப்பட்ட சம்பவத்தில், இருவரை பிடித்த போலீசார் ரூ.7,200 அபராதம் விதித்து வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

Advertisement

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் ஒரே பதிவு எண்ணுடன் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் இயக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியானது. இதுகுறித்து தகவல் அறிந்த போக்குவரத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொண்டனர்.

போக்குவரத்து காவல்துறை துணை ஆணையர் மகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற விசாரணையில், காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் மற்றும் அவரது நண்பர் சிபி ஆகியோர் சிக்கினர்.

விசாரணையில், அஸ்வினின் மோட்டார் சைக்கிளின் நம்பர் பிளேட்டில் இடம்பெற்றிருந்த பதிவு எண்ணை சிபி தனது மோட்டார் சைக்கிளிலும் பயன்படுத்தி இயக்கியது தெரியவந்தது.

Advertisement


இதையடுத்து, பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்காக சிபி இயக்கிய மோட்டார் சைக்கிளுக்கு ரூ.7,200 அபராதம் விதிக்கப்பட்டதுடன், இரண்டு மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement

மேலும், அஸ்வின் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளுக்கு இன்சூரன்ஸ் இல்லாதது உள்ளிட்ட விதிமீறல்களுக்காக ரூ.700 அபராதம் விதிக்கப்பட்டது.

கோவை மாநகரில் இதுபோன்று ஒரே பதிவு எண்ணைப் பயன்படுத்தி இயக்கப்படும் வாகனங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து காவல்துறை துணை ஆணையர் மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

மலைவாழ் மக்களின் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு! கோவையில் சிறப்பு கண்காட்சி!

கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் 162 ஸ்டால்களுடன் சிறப்பு கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் மலைவாழ் மக்கள் மற்றும் பெண்கள் தயாரிக்கும் இயற்கைப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளன.

Video

தொழிலாளர்கள் கொட்டகையை சேதப்படுத்திய காட்டுயானை- கோவை அருகே பரபரப்பு…

கோவை: கட்டிட தொழிலாளர்கள் தங்கியிருந்த தகர கொட்டகையை சேதப்படுத்திய ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை துடியலூர் அடுத்துள்ள கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று நள்ளிரவில் குடியிருப்புக்குள் புகுந்து வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த...