கோவை வந்த நடிகர் சூரி- சட்டமன்ற நிகழ்வுகள் குறித்து கூறிய கருத்து…

கோவை:நடிகர் விஜய் இல்லாத சினிமா துறை ஏமாற்றம் என்று நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.

Advertisement

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சட்டமன்றத்தை பார்ப்பது ஆரோக்கியமான விஷயம் என்று கோவை வந்த நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.

மண்டாட்டி திரைப்பட பிரமோஷனுக்கு வருகை புரிந்த நடிகர் சூரி, திரைப்படத்தின் கதாநாயகி மகிமா கோவைய விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய சூரி திரைப்படம் மிகவும் அருமையாக வந்துள்ளது என்றும் ஒவ்வொரு ஊரிலும் படம் குறித்தான பிரமோஷன் நடைபெற்று வருகிறது அதன்படி இரண்டு நாள் கோவையில் தான் இருப்போம் என்றார்.

Advertisement

மீனவர்களுக்கான ஸ்பெஷல் ஷோ தற்பொழுது வரை எதுவும் முடிவு செய்யப்படவில்லை அதனை தயாரிப்பாளர் தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.

இந்த திரைப்படம் மீனவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இருக்கும் என்று நம்புகிறேன் என்றும் ராமநாதபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் பாய்மர படகு போட்டி பல வருடங்களாக நடைபெற்று வருகிறது.

Advertisement

இந்த விளையாட்டை உலகம் முழுவதும் சேர்க்கின்ற படமாக இந்த படம் இருக்கும் என்ற அவர் இந்தப் போட்டி பலருக்கும் தெரியாது இதனை திரைப்படமாக பார்க்கும் பொழுது அனைவருக்கும் புதுவிதமான அனுபவமாக இருக்கும் என்றார்.

மீனவர்கள் சார்ந்த பிரச்சனைகளும் படத்தில் உள்ளது அதனை படத்தில் பார்த்தால் அனைவருக்கும் தெரியும், அதனை முன்கூட்டியே கூறிவிட்டால் சஸ்பென்ஸ் போய்விடும் என்றார்.
மேலும் பொழுதுபோக்கு படமாக மட்டும் இல்லாமல் ஒரு தேவையான படமாகவும் இது இருக்கும் என்றார்.

மீனவராக நடித்தது பெரும் பாக்கியமாக நினைக்கிறேன்இதை ஒரு அனுபவம் ஒரு வாழ்க்கை படமாக நான் கருதுகிறேன் என்றார்.

அரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்விக்குப்நான் எங்கே இருக்கிறேன் என்று எனக்கு தெரியாது. காமெடியனாக இருந்த என்னை மக்கள் ஒரு கதாநாயகனாக கொண்டு வந்து இருக்கிறார்கள் மக்கள் அங்கீகரித்தாலே யாராக இருந்தாலும் ஒரு துறையில் இருக்கலாம் என்றார். மேலும் மக்களுக்கு தேவையான படங்களை கொடுப்பதற்கு நான் ஆசைப்படுகிறேன்

சட்டமன்ற நிகழ்வுகளை பார்க்கிறீர்களா பொதுமக்கள் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள் என்ற கேள்விக்கு அது மிகவும் நல்ல விஷயம். காலை முதல் மாலை வரை சட்டசபையில் என்ன நடக்கிறது என்பது அனைவருக்கும் தெரிகிறது, குழந்தைகள் முதல் அனைவரும் சட்டமன்றம் பற்றி பேச ஆரம்பித்து விட்டார்கள் இது மிகவும் ஆரோக்கியமான ஒரு விஷயம் என்றார்.

நடிகர் விஜய் இல்லாத சினிமா துறை என்பது அந்த இடம் ஒரு ஏமாற்றம் தான் என்றார். அடுத்த திரைப்படம் அயலான் திரைப்படத்தை இயக்கிய இயக்குனருடன் நடிக்கப் போகிறேன் செப்டம்பர் இறுதியில் படப்பிடிப்பு துவங்கும் என நினைக்கிறேன் என்றார்.


மீனவர்களில் ஒருவனாக நடித்தது எனக்கு கிடைத்த பாக்கியம் என்ற அவஎ மீன் வாங்குவதில் நாம் பேரம் பேசுகிறோம் ஆனால் அந்த மீனுக்காக மீனவர்கள் கடலுக்குள் சென்று உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல் செல்கிறார்கள் மீனவர்களின் வலியை இந்த படத்தின் மூலம் தெரிந்து கொண்டேன் என்றார்.

மீனவர்கள் எப்பொழுதும் நன்றாக இருக்க வேண்டும் அவர்களுக்கான பாதுகாப்பாக அனைவரும் இருக்க வேண்டும் மீனவர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் அனைத்து துறைகளிலும் அவர்கள் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்றார்.

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

மலைவாழ் மக்களின் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு! கோவையில் சிறப்பு கண்காட்சி!

கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் 162 ஸ்டால்களுடன் சிறப்பு கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் மலைவாழ் மக்கள் மற்றும் பெண்கள் தயாரிக்கும் இயற்கைப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளன.

Video

தொழிலாளர்கள் கொட்டகையை சேதப்படுத்திய காட்டுயானை- கோவை அருகே பரபரப்பு…

கோவை: கட்டிட தொழிலாளர்கள் தங்கியிருந்த தகர கொட்டகையை சேதப்படுத்திய ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை துடியலூர் அடுத்துள்ள கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று நள்ளிரவில் குடியிருப்புக்குள் புகுந்து வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த...