கோவையில் மலேசியா சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல்- இளைஞரிடம் விசாரணை…

கோவை: கோவையில் மலேசியா சுற்றுலா பயணிகளை தாக்கிய இளைஞரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Advertisement

கோவையில் மலேசிய சுற்றுலா பயணிகளை அரிவாளால் தாக்குதல் நடத்திய விவகாரத்தில் இளைஞர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மலேசியா நாட்டைச் சேர்ந்த லோகநாதன்(52) மகன் யுகேந்திரன்(21) மற்றும் உறவினர்கள் என 10 பேர் சுற்றுலாவுக்காக கடந்த மாதம் இந்தியாவிற்கு வந்திருந்தனர்.

இவர்கள், கடந்த 2-ம் தேதி தனியார் சுற்றுலா வேனில் சென்னையில் இருந்து கேரளாவுக்கு சுற்றுலா சென்று விட்டு, மீண்டும் சென்னை திரும்பி வந்த போது, கோவை நவக்கரை அருகே பெட்ரோல் பங்க்கில் இரண்டு பேர் தகராறில் ஈடுப்பட்டனர். அப்போது லோகநாதன் மற்றும் யுகேந்திரன் ஆகிய இருவரை அந்த நபர்கள் அரிவாளால் தாக்கினர்.

Advertisement

மேலும் வேனை துரத்தி சென்ற பொழுது துப்பாக்கி போன்ற ஆயுதத்தை காட்டியதாக கூறப்படும் நிலையில் வேனின் ஓட்டுநர் அதிர்ச்சி அடைந்தார் அதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் மதுக்கரை பகுதியில் சாலையோரம் மோதி நின்றது. பின்னர் அங்குள்ள மக்கள் கூடியதால் இருசக்கர வாகனத்தில் விரட்டி வந்தவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக மதுக்கரை போலிஸார் மற்றும் க.க.சாவடிபோலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இவ்வழக்கில் தொடர்புடையவர்களை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றன.

Advertisement

இந்நிலையில் சிவகங்கை மாவட்டம், ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர்கள் இத்தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீஸார் அங்கு சென்று ஆகாஷ் என்ற இளைஞரை பிடித்து கோவைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

மலைவாழ் மக்களின் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு! கோவையில் சிறப்பு கண்காட்சி!

கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் 162 ஸ்டால்களுடன் சிறப்பு கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் மலைவாழ் மக்கள் மற்றும் பெண்கள் தயாரிக்கும் இயற்கைப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளன.

Video

தொழிலாளர்கள் கொட்டகையை சேதப்படுத்திய காட்டுயானை- கோவை அருகே பரபரப்பு…

கோவை: கட்டிட தொழிலாளர்கள் தங்கியிருந்த தகர கொட்டகையை சேதப்படுத்திய ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை துடியலூர் அடுத்துள்ள கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று நள்ளிரவில் குடியிருப்புக்குள் புகுந்து வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த...