கடைநிலை காவலர்கள் தான் பலி ஆடு?- தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் DYFI வலியுறுத்தும் விஷயம்…

கோவை: தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக அருணா ஜெகதீசன் கமிஷனின் அறிக்கையை முழுமையாக செயல்படுத்த வலியுறுத்தி DYFI முறையிட்டுள்ளனர்.

Advertisement

2018ம் ஆண்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற மக்கள் போராட்டத்தில் காவல்துறை துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பொதுமக்கள் உயிரிழந்தனர். அதன் பின்னர் அருணா ஜெகதீசன் தலைமையில் கமிஷன் ஒன்று அமைக்கப்பட்டு இது பற்றிய விசாரணை நடைபெற்றது.

விசாரணையின் அடிப்படையில் அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்ட நிலையில் அந்த அறிக்கையை தற்பொழுது வரை அரசு முழுமையாக செயல்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டும் தொடர்ந்து எழுந்து வருகிறது.

Advertisement

இந்நிலையில் அருணா ஜெகதீசன் கமிஷனின் அறிக்கையை அரசு செயல்படுத்த வலியுறுத்தியும் அது சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகள் மீதும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வலியுறுத்தியும் DYFI அமைபினர் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் முறையிட்டு மனு அளித்து வருகின்றனர்.

அதன்படி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மனு அளிக்கப்பட்டது. துப்பாக்கி சூடு சம்பவத்தில் அருணா ஜெகதீசன் அறிக்கையை முழுமையாக அமல்படுத்த வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி மனு மனு அளிக்கப்பட்டது.

Advertisement

இது குறித்து பேட்டியளித்த அமைப்பின் கோவை மாவட்ட செயலாளர் தினேஷ் ராஜா, அன்றைய அரசு பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்ததை குறிப்பிட்ட அவர் அதன் பின்னர் நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டதையும் அந்த கமிஷன் மூலம் பல்வேறு அறிக்கைகள் கொடுக்கப்பட்டதையும் கூறினார்.

அந்த அறிக்கையில் மாவட்ட ஆட்சியர் வருவாய்த்துறை அலுவலர்கள் காவல்துறை அதிகாரிகள் ஆகியோருக்கும் இந்த துப்பாக்கி சூட்டில் சம்பவம் இருப்பதாகவும் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் உயிரிழந்த குடும்பங்களுக்கு ஐம்பது லட்சம் ரூபாய் தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு முன்மொழிவுகளை அந்த கமிஷன் அளித்ததாக தெரிவித்தார்.

ஆனால் அதனை முந்தைய திமுக அரசும் தற்போதைய தமிழக கட்சி கழக அரசும் நிறைவேற்றவில்லை என்று தெரிவித்தார். மேலும் அந்த துப்பாக்கி சூட்டிற்கு காரணமான யாராக இருந்தாலும் எந்த உயர் அதிகாரிகளாக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சம் என்று துறை ரீதியான சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதனை வலியுறுத்தி என்று அனைத்து மாவட்டங்களிலும் தங்கள் அமைப்பின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்படுவதாகவும் தங்களது கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என்றும் கூறினார்.

அரசு நிர்வாகம் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே சண்டைகளை உருவாக்கிக் கொண்டே இருப்பதாகவும் மக்களிடம் பேசுவதில்லை என்று விமர்சித்த அவர் அன்றைய அரசே தலையிட்டு அந்த ஆலையை மூடியிருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்காது என்று தெரிவித்தார்.

உயர் அதிகாரிகளின் உத்தரவு இல்லாமல் கடை நிலையில் உலக காவலர்கள் பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த மாட்டார்கள் என்றும் அப்படி இருக்கும் பொழுது திட்டமிட்டு கடைநிலை ஊழியர்கள் பலி ஆடுகள் ஆக்கப்படுகிறார்கள் என்று தெரிவித்தார்.

மேலும் அந்த சம்பவத்திற்கு காரணமான மாவட்ட ஆட்சியர் மூன்று வருவாய் துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதுமட்டுமின்றி அருணா ஜெகதீசன் கமிஷன் கூறிய விஷயத்தில் அன்றைய முதல்வர் தொலைக்காட்சியை பார்த்து தான் அந்த சம்பவத்தை தெரிந்து கொண்டேன் என்று கூறியதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

அங்குள்ள காவல் துறை உயர் அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர் ஒவ்வொரு விஷயமாக முதல்வருக்கு தகவல் தெரிவித்து கொண்டுதான் இருந்ததாகவும் இப்படி இருக்கும் பொழுது அன்றைய முதலமைச்சருக்கும் இதில் பங்கு இருந்தால் கமிஷன் அறிக்கைப்படி அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

மலைவாழ் மக்களின் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு! கோவையில் சிறப்பு கண்காட்சி!

கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் 162 ஸ்டால்களுடன் சிறப்பு கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் மலைவாழ் மக்கள் மற்றும் பெண்கள் தயாரிக்கும் இயற்கைப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளன.

Video

தொழிலாளர்கள் கொட்டகையை சேதப்படுத்திய காட்டுயானை- கோவை அருகே பரபரப்பு…

கோவை: கட்டிட தொழிலாளர்கள் தங்கியிருந்த தகர கொட்டகையை சேதப்படுத்திய ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை துடியலூர் அடுத்துள்ள கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று நள்ளிரவில் குடியிருப்புக்குள் புகுந்து வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த...