என் படம் வெளியானால் படகுப்போட்டிக்கு அங்கீராகம்; கோவையில் சூரி பளிச்!

கோவை: மண்டாடி படம் வெளியான பிறகு வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போன்று படகு பந்தயத்திற்கான அங்கீகாரம் கிடைக்கும் என நம்புவதாக நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.

Advertisement

கோவை நவகரை பகுதியில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் மாணவர்களுடனான கலந்துரையாடலில் கலந்து கொள்வதற்காக மண்டாடி படக்குழுவினர் வருகை புரிந்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சூரி,

மண்டாடி படம் வெளியான பிறகு நமது தமிழகத்தின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போன்று இந்த மீனவர்களின் வீர விளையாட்டான படகு சவாரி விளையாட்டிற்கும் அரசு உரிய அங்கீகாரம் அளிக்கும் என நம்புவதாகக் கூறினார்.

Advertisement

முதல் முறையாக தனது படம் ஐ மேக்சில் வெளியாவது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்த அவர், மண்டாடி படம், தான் நடித்த விடுதலை படத்தைப் போலவே மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிவித்தார்.

இப்படத்தில் புகைப்பிடிக்கும் காட்சிகள் அமைவது தொடர்பாக படப்பிடிப்பின் போதே தான் கேள்வி எழுப்பியதாகவும், அப்போது கதைக்கு தேவை என்பதால் அது போன்ற காட்சிகள் இடம் பெற்றாலும் அதற்கு படத்தில் ஒரு மெசேஜ் கொடுத்துள்ளதாகவும் விளக்கமளித்தார் .

Advertisement

நம் மண் சார்ந்த படத்தில் நடித்த தொட்டி தனக்கு இருப்பதாகவும் தெரிவித்தவர் பின்னர் மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடிய அவர் மேலும் அவர்களை உற்சாகப்படுத்த அவர்களுடன் நடனமாடினார்.

மேலும் வீர விளையாட்டுகளுக்கு இளம் தலைமுறையினர் ஆதரவளிக்க வேண்டும் என தெரிவித்த அவர் கல்வியிலும் கவனம் தேவை என்றார் .

Amazon Link 3
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

மலைவாழ் மக்களின் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு! கோவையில் சிறப்பு கண்காட்சி!

கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் 162 ஸ்டால்களுடன் சிறப்பு கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் மலைவாழ் மக்கள் மற்றும் பெண்கள் தயாரிக்கும் இயற்கைப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளன.

Video

தொழிலாளர்கள் கொட்டகையை சேதப்படுத்திய காட்டுயானை- கோவை அருகே பரபரப்பு…

கோவை: கட்டிட தொழிலாளர்கள் தங்கியிருந்த தகர கொட்டகையை சேதப்படுத்திய ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை துடியலூர் அடுத்துள்ள கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று நள்ளிரவில் குடியிருப்புக்குள் புகுந்து வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த...