கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

Advertisement

கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் இ.எஸ்.ஐ தொகையை திரும்ப வழங்கக் கோரிக்கை போராட்டம் நடைபெற்று வருகிறது.

​கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில், பல்கலைக்கழக நிர்வாகத்தின் இ.எஸ்.ஐ (ESI) சட்ட மீறல் மற்றும் தொழிலாளர் விரோதப் போக்கு நடைபெறுவதாக கூறியும் அதனை கண்டித்தும் பாரதியார் பல்கலைக்கழகத் தொழிலாளர் சங்கம் சார்பில் தொடர் உள்ளிருப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

​சங்கத்தின் தலைவர் ரமேஷ் தலைமையில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில், தினக்கூலி மற்றும் தொகுப்பு ஊதிய அடிப்படையில் பணியாற்றும் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

Advertisement

சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட இ.எஸ்.ஐ பணத்தை உடனடியாகத் தொழிலாளர்களுக்குத் திரும்ப வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஊழியர்கள் கைகளில் கோரிக்கை பதாகைகளை ஏந்தியபடி பதிவாளர் அறை முன்பாக அமர்ந்து தீவிர உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பல்கலைக்கழகத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

Advertisement

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

மலைவாழ் மக்களின் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு! கோவையில் சிறப்பு கண்காட்சி!

கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் 162 ஸ்டால்களுடன் சிறப்பு கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் மலைவாழ் மக்கள் மற்றும் பெண்கள் தயாரிக்கும் இயற்கைப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளன.

Video

தொழிலாளர்கள் கொட்டகையை சேதப்படுத்திய காட்டுயானை- கோவை அருகே பரபரப்பு…

கோவை: கட்டிட தொழிலாளர்கள் தங்கியிருந்த தகர கொட்டகையை சேதப்படுத்திய ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை துடியலூர் அடுத்துள்ள கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று நள்ளிரவில் குடியிருப்புக்குள் புகுந்து வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த...