முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்திய கோவை எம்எல்ஏ கனிமொழி!

கோவை: பெண்கள் குறித்து அவதூறு பேசுவதை ஏற்க முடியாது என்று முதலமைச்சர் விஜய் இன்று சட்டப்பேரவையில் பேசிய நிலையில், அவரை நேரில் சந்தித்த கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ.கனிமொழி சந்தோஷ், அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

பெண்களின் கண்ணியத்தையும், பொதுமக்களின் மரியாதையையும் பாதுகாக்கும் வகையில், அவதூறாகவும் இழிவாகவும் பேசுபவர்களுக்கு எதிராக எந்தச் சூழலிலும் சமரசம் செய்ய முடியாது என முதலமைச்சர் விஜய் இன்று சட்டப்பேரவையில் தெரிவித்த உறுதியான கருத்துக்கு, சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் அவர்கள் வரவேற்பும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கனிமொழி கூறியதாவது:-

Advertisement

சட்டப்பேரவையில் முதலமைச்சர், பெண்களைப் பற்றியும் பொதுமக்களைப் பற்றியும் அவதூறாகவும் இழிவாகவும் பேசுவதை எந்தச் சூழலிலும் ஏற்றுக்கொள்ள முடியாது; தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டம் தனது கடமையைச் செய்யும் என்ற உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார்.

பெண்களை இழிவுபடுத்தும் பேச்சுகளுக்கு எதிராக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எடுத்துள்ள இந்த உறுதியான நிலைப்பாடு, என்னைப் போன்ற பெண் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் மிகப்பெரிய உத்வேகத்தையும் நம்பிக்கையையும் அளிக்கிறது.

Advertisement

Also Read; என் படம் வெளியானால் படகுப்போட்டிக்கு அங்கீராகம்; கோவையில் சூரி பளிச்!

பெண்களின் கண்ணியம், பாதுகாப்பு மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பதில் அரசு எந்தவித சமரசத்திற்கும் இடமளிக்காது என்பதை முதலமைச்சர் அவர்களின் இன்றைய சட்டப்பேரவை கருத்து தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. முதலமைச்சரின் இந்த உறுதியான நிலைப்பாட்டிற்கு நேரில் வாழ்த்து மற்றும் பாராட்டுகளைத் தெரிவித்தேன்” என்றார்.

Amazon Link 3
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

மலைவாழ் மக்களின் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு! கோவையில் சிறப்பு கண்காட்சி!

கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் 162 ஸ்டால்களுடன் சிறப்பு கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் மலைவாழ் மக்கள் மற்றும் பெண்கள் தயாரிக்கும் இயற்கைப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளன.

Video

தொழிலாளர்கள் கொட்டகையை சேதப்படுத்திய காட்டுயானை- கோவை அருகே பரபரப்பு…

கோவை: கட்டிட தொழிலாளர்கள் தங்கியிருந்த தகர கொட்டகையை சேதப்படுத்திய ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை துடியலூர் அடுத்துள்ள கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று நள்ளிரவில் குடியிருப்புக்குள் புகுந்து வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த...