கோவையில் உள்ள தற்காப்புக்கலை நிறுவனங்களுக்கு ஓர் அறிவிப்பு…

கோவை: கோவையில் பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் விடுதிகளில் சிலம்பம் மற்றும் கராத்தே அடிப்படைப் பயிற்சி அளிப்பதற்கு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

தமிழ்நாடு அரசால் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் விடுதிகளில் தங்கிப் பயிலும் பள்ளிமற்றும் கல்லூரி மாணவியருக்கு கராத்தே, சிலம்பம் ஆகிய தற்காப்புக்கலையில் அடிப்படைப்பயிற்சி அளிக்க ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி கராத்தே அடிப்படை பயிற்சியினை 3 மாதங்களுக்கு ஒரு வாரத்திற்கு 3 பயிற்சிகள் வீதம் 36 பயிற்சிகள் அளிக்க வேண்டும், சிலம்பம் அடிப்படை பயிற்சியினை 2 மாதங்களுக்கு ஒரு வாரத்திற்கு 3 பயிற்சிகள் வீதம் 24 பயிற்சிகள் அளிக்க வேண்டும்.

இதற்கு குறைந்தபட்சம் 10 ஆம்வகுப்பு முடித்திருக்க வேண்டும், தொழிற்நுட்பக் கல்வித்தகுதிகள் கராத்தே சான்றிதழ் பயிற்சி (Certificate course) பட்டயப்பயிற்சி (Diploma course), 1 ஆண்டு முதுநிலை பட்டயப்படிப்பு (P.G. in Diploma), சிலம்பம் தற்காப்பு கலை பயிற்சியினை பொறுத்தவரை கலை மற்றும் பண்பாட்டுத்துறையின் இணையதளத்தில் பதிவு செய்துள்ள மற்றும் அத்துறையால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமாக இருப்பதனை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

Advertisement

கராத்தே மற்றும் சிலம்பம் அடிப்படை பயிற்சி வழங்க தேர்ந்தெடுக்கும் நிறுவனமானது அரசு அல்லது தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவியருக்கு குறைந்த பட்சம் இரண்டு ஆண்டுகள் கராத்தே மற்றும் சிலம்பம் பயிற்சி வழங்கிய அனுபவம் இருக்க வேண்டும்.

கராத்தே மற்றும் சிலம்பம் பயிற்சியினை வழங்கும் நிறுவனத்திடம் இருந்து விண்ணப்பங்கள் கோயம்புத்தூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் 15.09.2026 அன்று மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் கிரியப்பனவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

மலைவாழ் மக்களின் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு! கோவையில் சிறப்பு கண்காட்சி!

கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் 162 ஸ்டால்களுடன் சிறப்பு கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் மலைவாழ் மக்கள் மற்றும் பெண்கள் தயாரிக்கும் இயற்கைப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளன.

Video

தொழிலாளர்கள் கொட்டகையை சேதப்படுத்திய காட்டுயானை- கோவை அருகே பரபரப்பு…

கோவை: கட்டிட தொழிலாளர்கள் தங்கியிருந்த தகர கொட்டகையை சேதப்படுத்திய ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை துடியலூர் அடுத்துள்ள கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று நள்ளிரவில் குடியிருப்புக்குள் புகுந்து வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த...