விநாயகர் சதுர்த்திக்கு செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை- கோவை மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பு…

கோவை: விநாயகர் சதுர்த்திக்கு வைத்து வழிபடும் சிலைகள் குறித்தும் அவ்விழாவில் செய்ய வேண்டியவை செய்யக்கூடாதவை பற்றி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

விநாயகர் சதுர்த்தி பண்டிகை வருகின்ற 14ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் சிலைகளை வைத்து வழிபடுவது குறித்தும் அவ்விழாவில் செய்ய வேண்டியவை செய்யக்கூடாதவை பற்றி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி விநாயகர் சதுர்த்தி விழாவில் செய்ய வேண்டியவை
சுற்றுச்சூழலுக்கு உகந்த விநாயகர் சிலைகளை பயன்படுத்த வேண்டும்

சுற்றுச்சூழலுக்கு உகந்த நீர் சார்ந்த இயற்கையாக மக்கக்கூடிய மற்றும் நச்சுத்தன்மை அற்ற இயற்கை காயங்களை சிலைகளுக்கு பயன்படுத்த வேண்டும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பூக்கள் இலைகள் மற்றும் துணிகளை பூஜை பொருட்களாக பயன்படுத்த வேண்டும், மீண்டும் உபயோகிக்க கூடிய அலங்கார துணிகளை பயன்படுத்த வேண்டும்

Advertisement

பிரசாத வினையாகத்திற்கு மக்கும் அல்லது மீண்டும் பயன்படுத்தக்கூடிய தட்டுகள் கண்ணாடிக் கோப்பைகளை பயன்படுத்த வேண்டும், குப்பைகளை பிரித்து அப்புறப்படுத்த வேண்டும், அறிவிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும்

எல் இ டி பல்புகள் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த விளக்குகளை பயன்படுத்த வேண்டும், அலங்கார பொருட்களை எதிர்கால பண்டிகைகளுக்கு சேமித்து வைத்து பயன்படுத்த வேண்டும்.

Advertisement

விநாயகர் சதுர்த்தி விழாவில் செய்யக்கூடாதவை,
பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலைகளை பயன்படுத்திக் கூடாது, சிலைகளை அலங்கரிப்பதற்கு தீங்கு விளைவிக்கும் ஒருமுறை உபயோகித்து தூக்கி எறியும் பிளாஸ்டிக் தர்மாகோல் மற்றும் ரசாயன பொருட்கள் அல்லது சாயங்களை பயன்படுத்தக் கூடாது, சிலைகளின் மேல் பூசிடும் பூசிற்கு நச்சுத்தன்மை உள்ள மக்கும் தன்மையற்ற ரசாயனங்கள் எண்ணெய் வண்ணப் பூச்சிகளை பயன்படுத்தக் கூடாது,

ஒருமுறை உபயோகித்து தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் மற்றும் தர்மாகோல் கொண்டு செய்யப்பட்ட பூஜை பொருட்களை பயன்படுத்தக் கூடாது, வண்ண பூச்சுகள் மற்றும் நச்சு ரசாயனங்கள் கொண்ட ஒரு முறை மட்டுமே உபயோகித்து தூக்கி எறியக்கூடிய அலங்கார பொருட்களை பயன்படுத்திக் கூடாது,

பண்டிகையின் பொழுது ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறிய கூடிய பிளாஸ்டிக் தட்டுகள் பிளாஸ்டிக் கோப்பைகள் கரண்டிகள் ஆகியவற்றை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்,

அனுமதி இல்லாத நீர் நிலைகளில் சிலைகளை கரைக்க கூடாது ஃபிலமெண்ட் பல்புகளை பயன்படுத்தக் கூடாது

என மாவட்டம் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

மலைவாழ் மக்களின் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு! கோவையில் சிறப்பு கண்காட்சி!

கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் 162 ஸ்டால்களுடன் சிறப்பு கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் மலைவாழ் மக்கள் மற்றும் பெண்கள் தயாரிக்கும் இயற்கைப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளன.

Video

தொழிலாளர்கள் கொட்டகையை சேதப்படுத்திய காட்டுயானை- கோவை அருகே பரபரப்பு…

கோவை: கட்டிட தொழிலாளர்கள் தங்கியிருந்த தகர கொட்டகையை சேதப்படுத்திய ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை துடியலூர் அடுத்துள்ள கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று நள்ளிரவில் குடியிருப்புக்குள் புகுந்து வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த...