கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்
நெல்லிக்காயிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நெல்லிக்காயிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல் பயிற்சி 16.09.2026 மற்றும் 17.09.2026 ஆகிய இரண்டு நாட்களில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை, அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண்மைப் பொறியியல் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெறும்.
அதில் நெல்லி பானங்கள், பழரச பானம் மற்றும் தயார் நிலை பானம், நெல்லி ஜாம்,தேன் நெல்லி, நெல்லி கேண்டி, நெல்லி மிட்டாய், பொடி மற்றும் துருவல் ஆகிய பயிற்சிகள் வழங்கப்படும்.
ஆர்வமுள்ளவர்கள் ரூ.1,770/- (ரூ.1500 + GST 18%) பயிற்சி முதல் நாளன்று செலுத்த வேண்டும். பேருந்து நிறுத்தம்: வாயில் எண்.7, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், மருதமலை சாலை வழியாக, கோயம்புத்தூர் – 641003.
மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
பேராசிரியர் மற்றும் தலைவர்,
அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,
கோயம்புத்தூர்- 641 003.
தொலைபேசி எணி- 9488518268
மின்னஞ்சல் -phtc@tnau.ac.in




