கோவை: கோவை செட்டிபாளையம் கரி மோட்டார்ஸ் ஸ்பீட்வேயில் நடைபெற்ற தேசிய அளவிலான Formula 4 கார் பந்தயத்தில், அதிவேகமாக சீறிப்பாய்ந்த ரேஸ் கார்கள் பார்வையாளர்களை வியப்பிலும் உற்சாகத்திலும் ஆழ்த்தின.
கோவை செட்டிபாளையம் பகுதியில் நடைபெற்ற தேசிய அளவிலான Formula 4 கார் பந்தயத்தில், அதிவேகமாக சீறிப்பாய்ந்த ரேஸ் கார்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.
ஜே.கே. டயர் மற்றும் RPBEL இணைந்து, கோவை செட்டிபாளையத்தில் உள்ள Kari Motor Speedway வளாகத்தில் தேசிய அளவிலான Formula 4 கார் பந்தயத்தை நடத்தினர்.
Indian Racing Festival என்ற பெயரில் நடைபெற்ற இந்த மோட்டார் பந்தயத்தில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கார் பந்தய வீரர்கள் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.
CAR RACE VIDEO
பந்தயத்தில் அதிவேகமாக சென்ற கார்கள், வளைவுகளில் வேகத்தை கட்டுப்படுத்தி மீண்டும் முழு வேகத்தில் சீறிப்பாய்ந்த காட்சிகள் பார்வையாளர்களை உற்சாகப்படுத்தின. குறிப்பாக, ரேஸ் கார்கள் ஒன்றையொன்று முந்திச் செல்ல முயன்ற தருணங்கள் போட்டியின் பரபரப்பை மேலும் அதிகரித்தன.
24 சுற்றுகளாக நடைபெற்ற இந்த விறுவிறுப்பான போட்டியை காண ஏராளமான மோட்டார் ஸ்போர்ட்ஸ் ரசிகர்கள் திரண்டிருந்தனர். ரேஸ் கார்கள் கர்ஜித்தபடி டிராக்கில் பறந்த காட்சிகளை பார்வையாளர்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
கோவையில் நடைபெற்ற இந்த தேசிய அளவிலான மோட்டார் பந்தயம், கார் பந்தய ரசிகர்களுக்கு வேகம், திறமை மற்றும் பரபரப்பு நிறைந்த அனுபவத்தை வழங்கியது.
BIKE RACE VIDEO
கோவை செட்டிபாளையம் கரி மோட்டார்ஸ் ஸ்பீட்வேயில் நடைபெற்ற தேசிய அளவிலான Formula 4 கார் பந்தயத்தில் ரேஸ் கார்கள் அதிவேகமாக சீறிப்பாய்ந்த காட்சிகள் பார்வையாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தின.





