கோவை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புளியகுளம் முந்தி விநாயகர் ராஜ அலங்காரத்தில் அருள் பாலித்தார்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் சந்தன காப்பில் விநாயகருக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்து விநாயகர் கோவில்களிலும் அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் சந்தன காப்பு ராஜா அலங்காரத்தில் விநாயகர் காட்சியளித்தார். கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோவில் உள்ள சிலை ஆசிய கண்டத்திலேயே என்பது 190 டன் எடை கொண்ட ஒற்றைக் கல்லால் ஆனால் சிலையாகும். இதன் உயரம் 19 அடி அகலம் 10 அடி ஆகும்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இங்குள்ள விநாயகருக்கு 50 கிலோ சந்தனம், இரண்டு டன் மலர்களால் ராஜ அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மயில் தோகை போன்ற மாலை விநாயகருக்கு அணிவிக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பாகும்.
அதிகாலையிலேயே பல்வேறு சிறப்பு பூஜைகள் யாகங்கள் செய்யப்பட்டு விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டை இனிப்புகள் ஆகியவை படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டது. பக்தர்களும் தொடர்ச்சியாக வருகை புரிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
மேலும் இன்றைய தினம் பக்தர்கள் எந்த ஒரு சிரமங்களும் இன்றி சாமி தரிசனம் செய்வதற்கு தடுப்புகள் அமைக்கப்பட்டு 40-க்கும் மேற்பட்ட காவலர்களும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளது. போக்குவரத்தையும் சீர் செய்து பக்தர்களை வரிசையாக அனுப்பி வருகின்றனர்.
கோவையில் புளியகுளம் விநாயகர் கோவில் மட்டுமின்றி ஈச்சனாரி விநாயகர் கோவில் உட்பட அனைத்து விநாயக கோவில்களிலும் விநாயகர் சதுர்த்தி சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.





