கோவை: விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயகருக்கு
10 லட்சம் ரூபாயைக் கொண்டு அலங்காரம் செய்து வழிபாடு செய்யப்பட்டது.
விநாயகர் சதுர்த்தியை ஒட்டி கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயக பெருமானுக்கு வெள்ளி கவசம் அணிவித்து கோவில் கருவறை முழுவதும் 10, 20, 50, 100, 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் 10 லட்சம் ரூபாயைக் கொண்டு அலங்காரம் செய்து வழிபாடு நடத்தினர்.
இதனை சுற்றுப் பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து சென்றனர்.
விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் தமிழகத்திலும் விநாயகரின் பிரம்மாண்ட சிலைகளை வைத்தும், அன்னதானம், ஊர்வலம் நடத்தியும் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயக பெருமானுக்கு வெள்ளி கவசம் அணிவித்து கோவில் கருவறை முழுவதும் 10, 20, 50, 100, 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் 10 லட்சம் ரூபாயைக் கொண்டு அலங்காரம் செய்து வழிபாடு நடத்தினர்.
இதனை சுற்றுப் பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து சென்றனர். மேலும் கைலாய வாத்தியங்கள் இசைத்தும், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி கொண்டாடினர்.
இதற்கான ஏற்பாடுகளை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர கோயில் கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.





