கோவையில் Periyar Walk…

கோவை: கோவையில் Periyar Walk நடை பேரணி நடைபெற்றது.

Advertisement

கோவையில் தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு திராவிடர் கழகம் சார்பில் Periyar Walk எனும் சமூகநீதி சமத்துவத்திற்கான நடை பேரணி நடைபெற்றது.

தந்தை பெரியாரின் 148 வது பிறந்த நாள் 17ம் தேதி கொண்டாடப்பட்டது. பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு ஒரு வார காலமாக பல்வேறு பகுதிகளில் பெரியார் அமைப்புகள் திராவிடர் அமைப்புகள் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

அனைத்து நிகழ்ச்சிகளிலும் பெரியாரின் கொள்கைகள் பொதுமக்களிடையே எடுத்துரைக்கப்பட்டு வருகிறது.

Advertisement

அதன் தொடர்ச்சியாக இன்று கோவையில் திராவிடர் கழகம் சார்பில் Periyar Walk எனும் சமூகநீதி- சமத்துவத்திற்கான நடை பேரணி நடைபெற்றது. வ உ சி மைதானத்தில் துவங்கிய இந்த பேரணி நேரு விளையாட்டு அரங்கம் அருகே நிறைவுற்றது.

இதனை ஆதித்தமிழர் பேரவை நிறுவனத் தலைவர் அதியமான் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இதில் நூற்றுக்கணக்கானோர் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்று அமைதியாக பேரணி மேற்கொண்டனர்.

Advertisement

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

இவங்களுக்கு வயசாகிடுச்சுனு சொன்னா நம்புவாங்களா?- 85 வயதிலும் குண்டு எரிந்து லாங் ஜம்ப் செய்த தாத்தா பாட்டிகள்…

கோவை: கோவையில் நடைபெறும் மூத்தோர் தடகளப் போட்டியில் முதியோர் அசத்தினர். கோவை நேரு உள் விளையாட்டு அரங்கில் கோவை மாவட்ட மூத்தோர் தடகள போட்டிகள் இன்று நடைபெற்று வருகிறது. நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வேகமான...

Video

கோவையில் ஈச்சர் லாரியில் நெழிந்த பாம்பு…

கோவை: எல் அண்ட் டி பைபாஸில் திரில் ஈச்சர் லாரி இன்ஜினில் பதுங்கிய 8 அடி சாரைப் பாம்பு மீட்கப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை எல் அண்ட் டி பைபாஸ் சாலையில்...