கோவையில் மாணவர்களுக்கு உணவு ஊட்டி விட்டு மகிழ்ந்த அமைச்சர்…

கோவை: கோவையில் காமராஜர் காலை உணவு திட்ட விரிவாக்க திட்டத்தை துவக்கி வைத்து மாணவர்களுடன் உணவருந்திய அமைச்சர்.

Advertisement

காமராஜர் காலை உணவு திட்டம் விரிவாக்கம் தமிழக முதலமைச்சர் விஜய்யால் இன்று துவக்கி வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளிகளிலும் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

அதன் ஒரு பகுதியாக கோவை ரத்தினபுரி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் சம்பத்குமார் கலந்துகொண்டு இந்த திட்டத்தை துவக்கி வைத்து மாணவ மாணவிகளுக்கு உணவு பரிமாறி மாணவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார். மேலும் மாணவர்களுக்கு ஊட்டி விட்டு மகிழ்ந்தார்.

அதனைத் தொடர்ந்து இப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் ஜெனி அகல்யா எனும் மாணவி குத்துச்சண்டை போட்டியில் மாநில அளவில் தங்கப்பதக்கம் வாங்கியதற்கு மாணவிக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார். இந்த நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Advertisement

இந்த நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் சம்பத்குமார் தமிழ்நாடு முதலமைச்சரின் தொலைநோக்கு சிந்தனையோடு இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது, கோவை மாவட்டத்தில் 501 பள்ளிகளில் புதிதாக இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது

இதன் மூலம் 56,560 மாணவ மாணவிகள் பயன் பெறுகிறார்கள் என்று தெரிவித்தார். மேலும் இதன் மூலம் மாணவர்களின் பெற்றோர்களும் மகிழ்ச்சி அடைவதாக கூறினார்.

Advertisement

கோவை இட்லி பாட்டிற்கு ஈரான் போர் காரணமாக சிலிண்டர் கொடுப்பதற்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டிருந்தது என்றும் தற்பொழுது பாட்டிக்கு சிலிண்டர் விநியோகம் தொடரப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டிய அவர் அந்த தனியார் நிறுவனத்திற்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக கூறினார்.

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கைவினைஞர்கள் தனித்தேர்வு- விண்ணப்பங்கள் வரவேற்பு…

கோவை: கைவினைஞர் தனித்தேர்வு குறித்தான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2027 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் DGT ல் நடத்தப்படும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித் தேர்வர்களாக (Private Candidates)...

Video

அண்ணா போகாதீங்க… இழுத்துட்டு போயிடும்” – கோவை அருகே கரைபுரண்ட வெள்ளம்: அலறிய பொதுமக்கள், வைரல் வீடியோ!

கோவை: வீரபாண்டி செல்லும் சாலையில் ரயில் தண்டவாளம் அருகே பெருக்கெடுத்த தண்ணீரால் பேருந்துகள், வாகனங்கள் ஸ்தம்பித்தது.​கோவை புறநகர்ப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாகப் பெரியநாயக்கன்பாளையம் - வீரபாண்டி சாலையில் காட்டாற்று வெள்ளம் போல்...