கோவை: மதுக்கரை ACC சிமெண்ட் தொழிற்சாலையை முற்றுகையிட முயன்ற பொதுமக்கள் கைது செய்யப்பட்டனர்.
கோவை மாவட்டம் மதுக்கரையில் உள்ள ஏசிசி சிமெண்ட் தொழிற்சாலையை முற்றுகையிட்ட பொதுமக்கள் கைது செய்து அழைத்து செல்லப்பட்டனர்ம்
கோவை மாவட்டம், மதுக்கரை அருகே ஏசிசி சிமெண்ட் தொழிற்சாலை உள்ளது. இதன் குத்தகை காலம் முடிவடைந்ததையொட்டி, இந்த சிமெண்ட் தொழிற்சாலையை அதானி நிறுவனம் வாங்கி, அதானி ஏசிசி என்ற பெயரில் சிமெண்ட் தொழிற்சாலை இயங்கி வருகின்றது.
இதற்கிடையே, இந்த சிமெண்ட் தொழிற்சாலையில் இருந்து வெளி வரும் புகை மற்றும் காற்று மாசால், அப்பகுதியில் உள்ள குரும்பபாளையம், மதுக்கரை மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மூச்சு திணறல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் அவதியடைந்தனர்.
இந்நிலையில், இந்த தொழிற்சாலையை மூட வலியுறுத்தி பொதும்மகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உடன்படாததையடுத்து, 50 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டு மண்டபத்தில் அடைத்து வைக்கப்படுள்ள பொதுமக்களிடம் மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.





