குறுக்கே வந்த பாம்பு- அலறி அடித்து ஓடிய சிறுவன்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: சைக்கிளில் சென்ற போது திடீரென குறுக்கே வந்த பாம்பின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

Advertisement

சைக்கிள் ஓட்டி செல்லும் போது திடீரென குறுக்கே வந்த பாம்பைக் கண்டு அலறி அடித்து தாவி குதித்து ஓடிய சிறுவனின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

கோவை மாநகர் SIHS காலனி இந்திரா நகர் பகுதியில் நேற்று மாலை சிறுவன் ஒருவன் சைக்கிள் ஓட்டிக்கொண்டு செல்லும் பொழுது திடீரென பாம்பு ஒன்று குறுக்கே வந்துள்ளது.
அதனை சற்றும் எதிர்பாராத சிறுவன் பதற்றமடைந்து சைக்கிளில் இருந்து தாவி குதித்து அலறியடித்து ஓடியுள்ளான்.

சைக்கிளில் முன்புற சக்கரம் பாம்பின் மீது ஏறி இறங்கியது. இருப்பினும் பாம்பும் உயிருடன் வந்த வழியே வேகமாக சென்றது. தற்பொழுது அந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

Advertisement

அப்பகுதிகளில் சில இடங்களில் புதர்கள் மண்டி கிடப்பதால் அங்கு பாம்பு, அரனை போன்ற விஷமுள்ள ஊர்வனங்கள் அதிகளவு உள்ளது. குறிப்பாக மழை காலங்களில் அவை வெளியேறி வீடுகளுக்குள் புகும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

மதுக்கரை சிமெண்ட் தொழிற்சாலை விவகாரம்- DYFI யின் கோரிக்கை…

கோவை: மதுக்கரை ஏசிசி சிமெண்ட் ஆலையில் ஆய்வு செய்து அப்பகுதி மக்களுக்கு தெரிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர். கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் செயல்பட்டு வரும்...

Video

அண்ணா போகாதீங்க… இழுத்துட்டு போயிடும்” – கோவை அருகே கரைபுரண்ட வெள்ளம்: அலறிய பொதுமக்கள், வைரல் வீடியோ!

கோவை: வீரபாண்டி செல்லும் சாலையில் ரயில் தண்டவாளம் அருகே பெருக்கெடுத்த தண்ணீரால் பேருந்துகள், வாகனங்கள் ஸ்தம்பித்தது.​கோவை புறநகர்ப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாகப் பெரியநாயக்கன்பாளையம் - வீரபாண்டி சாலையில் காட்டாற்று வெள்ளம் போல்...