கோவை நகைப்பட்டறைகளில் ரூ.3.5 கோடி தங்கம் வாங்கி மோசடி – கர்நாடக நகைக்கடை உரிமையாளர் கைது

கோவை : கோவை நகைப்பட்டறைகளில் ரூ.3.5 கோடி மதிப்பிலான தங்க நகைகளை வாங்கி பணம் கொடுக்காமல் மோசடி செய்ததாக கர்நாடகாவைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளரை பெரிய கடை வீதி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement

கோவை பெரிய கடை வீதியைச் சேர்ந்தவர் சர்வேஷ் (40). இவர் அப்பகுதியில் நகைப்பட்டறை நடத்தி வருகிறார். ஆர்டரின் பேரில் தங்க நகைகள் மற்றும் தங்க கட்டிகளை தயாரித்து வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், கர்நாடக மாநிலம் கங்காவதியைச் சேர்ந்த ஷியாம் ஷேட் (40) என்பவர் சர்வேஷுக்கு அறிமுகமாகியுள்ளார். தான் கர்நாடகாவில் நகைக்கடை நடத்தி வருவதாகவும், தனது கடைக்கு தங்க நகைகள் மற்றும் தங்க கட்டிகள் தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து ஒப்பந்தத்தின் அடிப்படையில் சர்வேஷ் சுமார் ஒன்றரை கிலோ தங்க நகைகளை ஷியாம் ஷேட்டுக்கு வழங்கியதாக கூறப்படுகிறது. அதேபோல், ஷியாம் ஷேட்டின் அறிவுறுத்தலின்பேரில் அவரது உறவினர் ஒருவர் கோவையில் உள்ள மற்றொரு வியாபாரியிடம் ஒரு கிலோ தங்க நகைகளை வாங்கியுள்ளார்.

Advertisement

இவ்வாறு மொத்தம் ரூ.3.5 கோடி மதிப்பிலான தங்க நகைகளை பெற்றுக் கொண்ட ஷியாம் ஷேட், பல மாதங்களாகியும் அதற்கான பணத்தை வழங்கவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து சர்வேஷ் பெரிய கடை வீதி போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஷியாம் ஷேட்டிடம் விளக்கம் கேட்டு சம்மன் அனுப்பினர். தொடர்ந்து 3 முறை சம்மன் அனுப்பியும் அவர் பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

Advertisement

இதையடுத்து பெரிய கடை வீதி போலீசார் 3 பேர் கர்நாடகா சென்று, அங்குள்ள நகைக்கடையில் இருந்த ஷியாம் ஷேட்டை கைது செய்து கோவைக்கு அழைத்து வந்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், சர்வேஷுக்கு ரொக்கமாக பணம் கொடுத்துவிட்டதாக ஷியாம் ஷேட் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால், அதற்கான ஆவணங்களை அவர் போலீசாரிடம் சமர்ப்பிக்கவில்லை என தெரிகிறது.

இதையடுத்து ஷியாம் ஷேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், அவரை சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே, ஷியாம் ஷேட்டின் மனைவி கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், சாதாரண உடையில் வந்த 3 பேர் தங்களை கோவை மாநகர போலீசார் என அறிமுகப்படுத்திக் கொண்டு தனது கணவரை அழைத்துச் சென்றதாகவும், எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், வழக்கு தொடர்பான விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்றும், சட்ட நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Amazon Link 3
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

பவர் சென்டர் பற்றி துரைவைகோ கூறிய விஷயம்…

கோவை: கட்சியினர்களுடன் பேரம் பேசுபவர்கள் தான் பவர் சென்டர் என துரை வைகோ தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ, வரவிருக்கும் இடைத்தேர்தலில் தவெக வேட்பாளரின்...

Video

கணுவாய் மருந்து கடையில் தீ விபத்து…

கோவை: கணுவாய் பகுதியில் மருந்து கடை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள் மற்றும் இதர பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகின. கோவை கணுவாய் பகுதி VMT...