“RTO சலான்” என வந்த WhatsApp மெசேஜ்… கோவையில் ரூ.1.46 லட்சம் பறிகொடுத்த நபர்!

கோவை : போலி ஆர்டிஓ சலான் அனுப்பி, தனியார் நிறுவன ஊழியரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1.46 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் குறித்து கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

கோவை பொள்ளாச்சி, கோயில்பாளையம் பகுதியைச் சேர்ந்த 45 வயது நபர் ஒருவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த மாதம் 19-ம் தேதி அவரது வாட்ஸ்அப் எண்ணுக்கு ஆர்டிஓ சலான் போன்று ஒரு மெசேஜ் வந்துள்ளது.

அந்த மெசேஜை திறந்து பார்த்தபோது, அதில் அவரது தனிப்பட்ட விவரங்களை பதிவு செய்யுமாறு கேட்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனை நம்பிய அவர், அதில் கேட்கப்பட்ட விவரங்களை பதிவு செய்துள்ளார்.

இதன் பின்னர் அவரது வங்கிக் கணக்கில் இருந்து அடுத்தடுத்து பல்வேறு பரிவர்த்தனைகள் மூலம் ரூ.1 லட்சத்து 46 ஆயிரத்து 400 எடுக்கப்பட்டுள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், வங்கியை தொடர்பு கொண்டு விசாரித்துள்ளார்.

Advertisement

அப்போதுதான் வாட்ஸ்அப்பில் வந்த ஆர்டிஓ சலான் மெசேஜ் போலியானது என்பதும், அதன் மூலம் தனது வங்கி கணக்கு விவரங்களை பயன்படுத்தி பணம் மோசடி செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து அவர் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, போலி சலான் மெசேஜ் அனுப்பி பணத்தை மோசடி செய்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Amazon Link 3
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

Latest News Coimbatore | கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மாவட்டத்தின் முக்கிய அரசியல், குற்றம், வானிலை, போக்குவரத்து மற்றும் உள்ளூர் நிகழ்வுகளின் உடனடி செய்திகளை அறிந்து கொள்ளுங்கள்.

Video

கணுவாய் மருந்து கடையில் தீ விபத்து…

கோவை: கணுவாய் பகுதியில் மருந்து கடை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள் மற்றும் இதர பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகின. கோவை கணுவாய் பகுதி VMT...