அரசியல் லாபத்திற்காக குழந்தைகளை பயன்படுத்துவதா? – உதயநிதி மீது கனிமொழி சந்தோஷ் விமர்சனம்

கோவை: தேர்தல் பிரசாரத்தில் சிறுவனை பயன்படுத்தியதாக கூறப்படும் விவகாரத்தில், உதயநிதி ஸ்டாலினுக்கு கவுண்டம்பாளையம் MLA கனிமொழி சந்தோஷ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisement

தேர்தல் அரசியலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக குழந்தைகளையும் சிறுவர்களையும் அரசியல் பிரசாரத்தில் பயன்படுத்துவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் பிரசாரத்தின்போது சிறுவன் ஒருவரை அரசியல் பிரசாரத்தில் ஈடுபடுத்தி, அரசியல் கருத்துகளை பேச வைத்ததாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தேர்தல் நடவடிக்கைகளில் குழந்தைகளை பயன்படுத்தக் கூடாது என்ற விதிமுறைகள் உள்ள நிலையில், சிறுவனை அரசியல் பிரசாரத்திற்கு பயன்படுத்தியிருப்பது வேதனையளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குழந்தைகள் அரசியல் ஆயுதங்களோ அல்லது அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தப்படும் பகடைக்காய்களோ அல்ல. அவர்களின் பிஞ்சு மனதையும், அறியாமையையும் அரசியல் லாபத்திற்காக பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என கனிமொழி சந்தோஷ் தெரிவித்துள்ளார்.

Advertisement

அரசியல் தலைவர்கள் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டியது வெறுப்பையும் அரசியல் வன்மத்தையும் அல்ல என்றும், கல்வி, சமத்துவம், ஜனநாயகம் மற்றும் நல்லொழுக்கம் குறித்த நல்ல கருத்துகளையே அவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஒரு அரசியல்வாதியின் உண்மையான கடமை குழந்தைகளின் கைகளில் அரசியல் பிரசாரப் பொருட்களை கொடுப்பது அல்ல; புத்தகங்களை கொடுத்து அவர்களின் கல்வி மற்றும் எதிர்காலத்திற்கு வழிகாட்டுவதே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலத்தை பாதுகாப்பதே அரசியலின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும். அரசியல் ஆதாயத்திற்காக குழந்தைகளை பயன்படுத்தும் போக்கு இனியாவது முடிவுக்கு வர வேண்டும் என கனிமொழி சந்தோஷ் வலியுறுத்தியுள்ளார்.

Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கத்திமுனையில் ஐடி ஊழியரிடம் வழிப்பறி – ஆட்டோவில் வந்த 4 பேர் கைவரிசை

கோவை செட்டிப்பாளையம் சாலையில் ஐடி ஊழியரை கத்தியை காட்டி மிரட்டி செல்போன், வங்கி அட்டைகளை பறித்ததுடன், ரகசிய எண்ணை வாங்கி அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.7,500 பணத்தையும் மர்ம நபர்கள் எடுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Video

கணுவாய் மருந்து கடையில் தீ விபத்து…

கோவை: கணுவாய் பகுதியில் மருந்து கடை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள் மற்றும் இதர பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகின. கோவை கணுவாய் பகுதி VMT...