கோவையில் சொத்து வரி வசூல் ரூ.306 கோடியை தாண்டியது!

கோவை : 2026-27ம் நிதியாண்டில் கோவை மாநகராட்சியில் ஏப்ரல் 1 முதல் அக்டோபர் 4ம் தேதி வரை ரூ.306.80 கோடி சொத்து வரி வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் ஆன்லைன் மூலம் மட்டும் ரூ.134.50 கோடி வசூலாகியுள்ளது.

Advertisement

கோவை மாநகராட்சிக்குட்பட்ட 5 மண்டலங்களில் உள்ள 100 வார்டுகளில் 5 லட்சத்து 97 ஆயிரத்து 963 பேர் சொத்து வரி செலுத்தி வருகின்றனர். இதன் மூலம் மாநகராட்சிக்கு ஆண்டுதோறும் ரூ.523.10 கோடி வருவாய் கிடைத்து வருகிறது.

2026-27ம் நிதியாண்டுக்கான சொத்து வரி மற்றும் நிலுவைத் தொகை வசூல் கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் அக்டோபர் 4ம் தேதி வரை நடைபெற்றது. இந்த காலகட்டத்தில் மட்டும் ரூ.306.80 கோடி சொத்து வரியாக வசூலிக்கப்பட்டுள்ளது.

இதில், ஆன்லைன் மற்றும் டிஜிட்டல் முறையில் மட்டும் ரூ.138.81 கோடி வசூலாகியுள்ளது. மொபைல் ஆப் மூலம் ரூ.44 லட்சம், ஆன்லைன் வழியாக ரூ.134.50 கோடி, ECS மூலம் ரூ.3.86 கோடி, POS கார்டு மூலம் ரூ.2 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் மட்டும் 88,732 பேர் சொத்து வரி செலுத்தியுள்ளனர்.

Advertisement

மீதமுள்ள ரூ.163.13 கோடி ரொக்கம், காசோலை மற்றும் வங்கி வரைவோலை மூலமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் 47,728 பேரிடமிருந்து ரூ.46.63 கோடி சொத்து வரி வசூலிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 30ம் தேதி ஒரே நாளில் மட்டும் ரூ.4.87 கோடி வரி செலுத்தப்பட்டுள்ளது.

Advertisement

இதுதவிர, தனியார் மற்றும் அரசு நிறுவனங்களிடம் இருந்து ரூ.17.30 கோடி தொழில் வரியும், காலியிட வரியாக ரூ.2.94 கோடியும் வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி கமிஷனர் கட்டா ரவி தேஜா தெரிவித்துள்ளார்.

Coimbatore Corporation collects Rs 306.80 crore property tax in 2026-27 fiscal year

Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

“எஸ்.ஐ.ஆர். பணிகளால் ஸ்டாலின், மம்தா தோல்வி குறித்தும் சந்தேகம்” – கிருஷ்ணசாமி

எஸ்.ஐ.ஆர். பணிகளால் ஸ்டாலின், மம்தா உள்ளிட்ட தலைவர்களின் தேர்தல் வெற்றி குறித்தும் சந்தேகம் எழுவதாக கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்

Video

கோவையில் அடேங்கப்பா திருட்டு- வீடியோ காட்சிகள்…

கோவை: கோவையில் வண்டி சீட்டுக்கு அடியில் தேங்காய்களை திருடி சென்ற வியாபாரிகள். கோவை மாவட்டம், சூலூர் பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் தேங்காய் பறிப்பதற்காக வந்த வியாபாரிகள், தங்களது இருசக்கர வாகனத்தின் சீட்டுக்கு அடியிலும் கொண்டு...