திருமண வலைதளத்தில் அறிமுகமாகி ரூ.25 லட்சம் மோசடி? சிறையில் கல்யாண மன்னன்!

கோவை : திருமணம் செய்வதாகக் கூறி பெண்களிடம் பழகி, நகைகள் மற்றும் லட்சக்கணக்கில் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நபரின் மோசடியில் மேலும் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

கோவை ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த 32 வயது பெண் ஒருவர் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இவரது கணவர் கடந்த 2022-ம் ஆண்டு உயிரிழந்தார். இதையடுத்து, அவரது எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு உறவினர்கள் மறுமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

இந்த நிலையில், கடந்த 2024-ம் ஆண்டு திருமண வரன் தேடும் இணையதளம் மூலம் திருப்பூர் ராயபுரம், ரங்கநாதபுரம் 2-வது வீதியைச் சேர்ந்த ராம்குமார் (45) என்பவர் அந்தப் பெண்ணுக்கு அறிமுகமாகியுள்ளார்.

பின்னர், திருமணம் செய்து கொள்வதாகக் கூறி அவருடன் பழகிய ராம்குமார், அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, அவரிடமிருந்து 5 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.10 லட்சம் பெற்றதாகக் கூறப்படுகிறது.

Advertisement

இதேபோல், சென்னையைச் சேர்ந்த மற்றொரு பெண்ணிடமும் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பழகி, அவரை பாலியல் வன்கொடுமை செய்து ரூ.15 லட்சம் மோசடி செய்ததாகப் புகார் எழுந்தது.

இதனால் பாதிக்கப்பட்ட இரு பெண்களும் கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராம்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement

இதற்கிடையே, இந்த மோசடி தொடர்பாக ராம்குமாரின் மனைவி வைதேகி மற்றும் அவரது மாமனார் கிருஷ்ணன் ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தற்போது ராம்குமாரின் மனைவி மற்றும் மாமனாருக்கு இந்த மோசடியில் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும், திருமணம் செய்வதாகக் கூறி ராம்குமார் வேறு பெண்களிடமும் பணம் மற்றும் நகைகளைப் பெற்று ஏமாற்றியுள்ளாரா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

“திருடன்… திருடன்!” கூச்சலிட்ட பெண் – நகையை விட்டுவிட்டு பைக்கில் தப்பிய மர்ம நபர்!

கோவையில் அதிகாலையில் வீட்டின் முன்பு கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண்ணிடம் தங்கச் செயினை பறிக்க முயன்ற மர்ம நபர், அவர் கூச்சலிட்டதால் நகையை விட்டுவிட்டு பைக்கில் தப்பிச் சென்றார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Video

கோவையில் அடேங்கப்பா திருட்டு- வீடியோ காட்சிகள்…

கோவை: கோவையில் வண்டி சீட்டுக்கு அடியில் தேங்காய்களை திருடி சென்ற வியாபாரிகள். கோவை மாவட்டம், சூலூர் பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் தேங்காய் பறிப்பதற்காக வந்த வியாபாரிகள், தங்களது இருசக்கர வாகனத்தின் சீட்டுக்கு அடியிலும் கொண்டு...