கோவை: கோவை அவினாசி சாலையில் உள்ள கஸ்தூரி சீனிவாசன் கலை அரங்கத்தில், ‘6வது Aurora Series – 2026’ என்ற பெயரில் ‘Vibration of Colours’ ஓவியக் கண்காட்சி அக்.11 முதல் 17-ம் தேதி வரை 7 நாட்கள் நடைபெற உள்ளது.
வண்ணங்கள், உணர்வுகள், கலாச்சாரம் மற்றும் மனித வாழ்க்கையின் அழகை ஓவியங்கள் வழியாக வெளிப்படுத்தும் நோக்கில் இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மருத்துவர் மதிநிறை செல்வன் ஏற்பாட்டில் நடைபெறும் இக்கண்காட்சியில், கலை ஆர்வலர்களைக் கவரும் வகையில் பல்வேறு ஓவியங்கள் இடம்பெற உள்ளன.
ஓவியம் என்பது வெறும் வண்ணங்களின் கலவை மட்டுமல்ல; கலைஞரின் எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் பார்வையை வெளிப்படுத்தும் ஒரு படைப்புக் கலை.
அந்த வகையில், வண்ணங்கள் மற்றும் உணர்வுகளின் வெளிப்பாடாக அமையும் ‘Vibration of Colours’ கண்காட்சி, ஓவியக் கலையில் ஆர்வமுள்ளவர்களுக்கும் பொதுமக்களுக்கும் கலைப் படைப்புகளை நேரில் கண்டு ரசிக்கும் வாய்ப்பை வழங்குகிறது.
இந்தக் கண்காட்சியின் தொடக்க விழா அக்.11-ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.
இதில் ELCE மருத்துவமனையின் மருத்துவர்கள் ராஜன் மற்றும் வித்யா ராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு கண்காட்சியைத் தொடங்கி வைக்கின்றனர்.
அக்.11 முதல் 17-ம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 6.30 மணி வரை கண்காட்சி நடைபெறும். கலை ஆர்வலர்கள், ஓவியக் கலைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கண்காட்சியைப் பார்வையிடலாம்.






