Breaking News: கோவையில் ஆரம்ப சுகாதர நிலையத்தின் அலட்சியத்தால் நிறைமாத கர்ப்பிணி உயிரிழப்பு!

கோவை: கோவை தெலுங்குபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறி, நிறைமாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

மருத்துவமனையின் அலட்சியமே தாய் மற்றும் வயிற்றில் இருந்த குழந்தையின் உயிரிழப்புக்குக் காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி சாந்தி. இந்தத் தம்பதிக்கு ஏற்கனவே 5 வயதில் பெண் குழந்தை உள்ளது. இரண்டாவது பிரசவத்திற்காக சாந்தி, கோவை செல்வபுரத்தில் உள்ள தனது தங்கை வீட்டில் தங்கியிருந்தார்.

இந்நிலையில், நேற்று காலை சுமார் 11 மணியளவில் சாந்தி தனது தாய் சுந்தரவல்லியுடன் தெலுங்குபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சென்றுள்ளார். அங்கு சாந்தியைப் பரிசோதித்த மருத்துவர், அவரை மருத்துவமனையில் அனுமதிக்க அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

Advertisement

இதையடுத்து மருத்துவர் அங்கிருந்து சென்றுவிட்டதாகவும், அங்கு இருந்த செவிலியர் மட்டுமே சாந்திக்கு சிகிச்சை அளித்ததாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, நள்ளிரவு 12 மணியளவில் சாந்திக்கு கடுமையான ரத்தப்போக்கு ஏற்பட்டதுடன், உடல்நிலையும் பாதிக்கப்பட்டுள்ளது. அப்போது மருத்துவர் அங்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது.

Advertisement

இதையடுத்து, நள்ளிரவு 2.30 மணியளவில் ஆம்புலன்ஸ் மூலம் சாந்தி கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து சாந்தியின் உறவினர்கள் கூறுகையில், “சாந்தியின் உடல்நிலை ஆபத்தான நிலையில் இருப்பது தெரிந்தும், ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கவில்லை.

அங்கு இருந்த ஒரு செவிலியர் மற்றும் தூய்மைப் பணியாளரைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது. பரிசோதனைக்குப் பின்னர் சாந்திக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டதுடன், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கும் ஏற்பட்டது.

காலை 11 மணிக்கு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சென்ற நிலையில், நள்ளிரவு 2.30 மணிக்குத்தான் கோவை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார்.

ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே சாந்தி உயிரிழந்துவிட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தாயை இழந்து தவிக்கும் 5 வயது சிறுமியின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு, அவரது வாழ்வாதாரத்திற்கு அரசு உரிய உதவிகளை வழங்க வேண்டும்” என்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மருத்துவத் துறையினர் விசாரணை நடத்தி, சிகிச்சை அளிக்கப்பட்ட விதம் மற்றும் மருத்துவர் பணியில் இருந்தது தொடர்பான விவரங்களை ஆய்வு செய்வது அவசியம் என உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கோவை தெலுங்குபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறி, நிறைமாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

A pregnant woman and her unborn baby reportedly died while being taken to Coimbatore Government Hospital, following allegations of delayed treatment at a primary health centre.

Amazon Link 3
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

ஒரு வாரத்தில் நகையை மீட்டுத் தருவதாகக் கூறி ஏமாற்றம் – கோவையில் புகார்!

கோவை இருகூரில் 6 பவுன் தங்க நகையை வாங்கித் திருப்பித் தராமல் மோசடி செய்ததாக பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Video

கோவையில் அடேங்கப்பா திருட்டு- வீடியோ காட்சிகள்…

கோவை: கோவையில் வண்டி சீட்டுக்கு அடியில் தேங்காய்களை திருடி சென்ற வியாபாரிகள். கோவை மாவட்டம், சூலூர் பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் தேங்காய் பறிப்பதற்காக வந்த வியாபாரிகள், தங்களது இருசக்கர வாகனத்தின் சீட்டுக்கு அடியிலும் கொண்டு...