கூகுள் மேப் ரிவ்யூ செய்தால் பணம் எனக் கூறி மோசடி – கோவையில் வாலிபர் ஏமாற்றம்

கோவை : கூகுள் மேப்பில் ரிவ்யூ பதிவிட்டால் பணம் வழங்கப்படும் எனக் கூறி, கோவையைச் சேர்ந்த வாலிபரிடம் ரூ.67,995 மோசடி செய்த மர்ம நபர்கள் குறித்து மாவட்ட சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

கோவை சூலூரைச் சேர்ந்த 23 வயது வாலிபர் ஒருவர், தனியார் நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த 2024-ம் ஆண்டு மே மாதம் வாட்ஸ்அப் மூலம் ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில், கூகுள் மேப்பில் ரிவ்யூ பதிவிடும் பகுதி நேர வேலை இருப்பதாகவும், ஒவ்வொரு ரிவ்யூவுக்கும் பணம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதை நம்பிய அந்த வாலிபர், மர்ம நபர்கள் கூறியபடி கூகுள் மேப்பில் ரிவ்யூக்களைப் பதிவிட்டு வந்துள்ளார். இதற்காக அவருக்கு ஆரம்பத்தில் சிறிய தொகை வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அந்த வேலையின் மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, வாலிபரைத் தொடர்புகொண்ட மர்ம நபர்கள், பணத்தை முதலீடு செய்து ரிவ்யூ பதிவிட்டால் அதிக வருமானம் பெறலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதை உண்மை என நம்பிய அவர், அவர்கள் தெரிவித்த வங்கிக் கணக்குகளுக்குப் பல்வேறு தவணைகளாக மொத்தம் ரூ.67,995 அனுப்பியுள்ளார்.

Advertisement

ஆனால், பணத்தை அனுப்பிய பிறகு அவருக்கு எந்தத் தொகையும் திரும்பக் கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த வாலிபர், பணம் பெற்ற மர்ம நபர்களைத் தொடர்புகொள்ள முயன்றுள்ளார்.

ஆனால், அவர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை எனக் கூறப்படுகிறது. அப்போதுதான் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.

Advertisement

இதையடுத்து, பாதிக்கப்பட்ட வாலிபர் கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கூகுள் மேப் ரிவ்யூ வேலைவாய்ப்பு பெயரில் பண மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Amazon Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

ஒரு வாரத்தில் நகையை மீட்டுத் தருவதாகக் கூறி ஏமாற்றம் – கோவையில் புகார்!

கோவை இருகூரில் 6 பவுன் தங்க நகையை வாங்கித் திருப்பித் தராமல் மோசடி செய்ததாக பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Video

கோவையில் அடேங்கப்பா திருட்டு- வீடியோ காட்சிகள்…

கோவை: கோவையில் வண்டி சீட்டுக்கு அடியில் தேங்காய்களை திருடி சென்ற வியாபாரிகள். கோவை மாவட்டம், சூலூர் பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் தேங்காய் பறிப்பதற்காக வந்த வியாபாரிகள், தங்களது இருசக்கர வாகனத்தின் சீட்டுக்கு அடியிலும் கொண்டு...