கோவையில் துவங்கிய தீபாவளி விற்பனை…

கோவை: கோவையில் தீபாவளி விற்பனை துவங்கியது.

கோவையில் தீபாவளி விற்பனை களைகட்டத் துவங்கி உள்ளது. காவல்துறை சார்பிலும் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

நவம்பர் 8ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் இன்னும் இரண்டு வாரங்களில் அதற்கு உள்ளன. இந்நிலையில் தீபாவளி விற்பனை கோவையில் களைகட்ட துவங்கியுள்ளது.

கோவை மாநகரை பொறுத்தவரை டவுன்ஹால், ஒப்பணக்கார வீதி, காந்திபுரம் கிராஸ் கட் சாலை ஆகிய பகுதிகள் முக்கிய இடங்களாக உள்ளது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த பகுதிகளுக்கு வருகை புரிந்து தீபாவளிக்கு புத்தாடைகள் மற்றும் பல்வேறு பொருட்களை வாங்கி செல்வர்.

Advertisement

அதன்படி தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இரண்டு வாரங்களை உள்ள நிலையில் தற்பொழுது தீபாவளி விற்பனை துவங்கியுள்ளது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தீபாவளி பண்டிகைக்கு புத்தாடைகளை குழந்தைகளுடன் வந்து வாங்கி செல்கின்றனர். பெரிய பெரிய கடைகள் மட்டும் இன்றி சாலையோர கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது.

இந்நிலையில் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்கும் ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement

பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் ஒலிபெருக்கிகள் மூலம் பாதுகாப்பு குறித்து பொது மக்களுக்கு தொடர்ச்சியாக அறிவிக்கப்பட்டு வருகிறது.

இன்னும் ஓரிரு நாட்களில் வாட்ச் டவர் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

மழை பாதிப்புகள் குறித்து புகார் தெரிவிக்க வாட்ஸ்அப் எண் அறிவிப்பு- கோவை மாநகராட்சி நிர்வாகம்…

கோவை: வடகிழக்கு பருவமழையையொட்டி மழைநீர் தேக்கம், மழைநீர் பாதிப்புகள் குறித்து புகார் தெரிவிக்க வாட்ஸ்அப் எண் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையையோட்டி, மழைநீர் தேக்கம் மற்றும் மழைநீர் தொடர்பான பாதிப்புகள் குறித்து...

Video

டீக்கடையில் புகுந்த கார்- பெண்கள் காயம்- கோவையில் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்…

கோவை: கணியூர் டோல்கேட் அருகே டீக்கடையில் புகுந்த அதிவேக காரால் 2 பெண்கள் படுகாயம் அடைந்த, சி.சி.டி.வி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்து உள்ள கணியூர்...