தீபாவளி ஷாப்பிங் போறீங்களா? கோவையில் 10 இடங்களில் போலீஸ் கண்காணிப்பு கோபுரங்கள்!

கோவை : தீபாவளியை முன்னிட்டு கோவை கடைவீதிகளில் 10 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படுகின்றன. திருட்டுச் சம்பவங்களைத் தடுக்க சிசிடிவி கண்காணிப்பு மற்றும் சாதாரண உடையில் போலீசார் ரோந்து செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை நவம்பர் 8ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், பொதுமக்கள் புத்தாடைகள் மற்றும் தீபாவளிப் பொருட்களை வாங்குவதற்காக கோவையின் முக்கியக் கடைவீதிகளுக்குப் படையெடுத்து வருகின்றனர். குறிப்பாக, பெரியகடை வீதி, ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் ரோடு, 100 அடி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால் கடைவீதிகளில் மக்கள் நெரிசலுடன், வாகனப் போக்குவரத்திலும் நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

Advertisement

பண்டிகைக் காலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும் போக்குவரத்துப் போலீசாரும் சட்டம் ஒழுங்கு போலீசாரும் இணைந்து பணியாற்றி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, முக்கியக் கடைவீதிகளில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், தீபாவளிக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ளதால் கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தார். இந்தக் கூட்டத்தைப் பயன்படுத்திப் பொதுமக்களிடம் பணம் மற்றும் நகைகளைத் திருடும் சம்பவங்களைத் தடுக்கத் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.

Advertisement

மேலும், சிசிடிவி கேமராக்கள் மூலம் சந்தேகத்திற்கிடமான நபர்களைக் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், முக்கிய இடங்களில் ஒலிபெருக்கிகள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

அதன்படி, ஒப்பணக்கார வீதியில் 4 இடங்கள், பெரியகடை வீதியில் 2 இடங்கள், கிராஸ்கட் ரோடு பகுதியில் 2 இடங்கள், நஞ்சப்பா சாலையில் 2 இடங்கள் என மொத்தம் 10 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படுகின்றன. இந்தக் கோபுரங்களில் நின்று போலீசார் கடைவீதிகளில் நடைபெறும் நடவடிக்கைகளைக் கண்காணிக்க உள்ளனர்.

Advertisement

அதேபோல், சாதாரண உடைகளில் தனிப்படை போலீசாரும் ரோந்து பணியில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளனர். சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித்திரியும் நபர்கள் குறித்து உடனடியாக போலீசாருக்குத் தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தீபாவளி விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், கோவை கடைவீதிகளில் திருட்டுச் சம்பவங்களைத் தடுப்பதற்கும், பொதுமக்கள் பாதுகாப்பாகப் பொருட்கள் வாங்கிச் செல்வதை உறுதி செய்வதற்கும் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

Police set up 10 surveillance towers in Coimbatore shopping streets ahead of Diwali to prevent theft and improve public safety.

Amazon Link 3
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

Video

கோவில்பாளையத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் திருட முயற்சி – சிசிடிவி கேமராவை ஸ்ப்ரே அடித்து மறைத்த மர்ம நபர்…

கோவை: கோவில்பாளையம் பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், கோவில்பாளையம் பகுதியில் உள்ள தனியார் ஏடிஎம் மையத்தில் திருட முயன்ற மர்ம நபர்,...