கோவை: இந்த வாரம் வெளியாகப் போகும் ஓடிடி படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களைப் பற்றி தற்போது காணலாம்.
காலம் மாற மாற சினிமாவின் அத்தியாயமும் மாறிக் கொண்டே வருகிறது. முன்பெல்லாம் தியேட்டர்களில் வரும் படங்களுக்கே வரவேற்பு கிடைத்து வந்த நிலையில், தற்போது அதற்கு இணையாக ஓடிடி படங்களுக்கு வரவேற்பு இருந்து வருகிறது. அதிலும், தியேட்டர்களுக்கு வராமலே, ஓடிடியிலேயே வெற்றி அடைந்த படங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால், பெரும்பாலான நடிகர், நடிகைகள் ஓடிடி வெப் சீரியஸ்களில் நடிக்கவே ஆர்வம் காட்டி வருகின்றனர். சென்சார் கட் பிரச்சினை இல்லாததால், கவர்ச்சி மற்றும் ஆபாச வார்த்தைகள் ஓடிடி வெப் சீரியஸ்களில் தாராளமாக இருக்கின்றன. இது இளம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இந்த வார இறுதியில் OTTயில் என்ன பார்க்கலாம்?
இம்மார்ட்டல்
ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் காயடு லோஹர் நடிப்பில் உருவாகியுள்ள தமிழ் ரொமான்டிக் ஹாரர் படம் இம்மார்ட்டல். மரியப்ப சின்னா இயக்கியுள்ள இத்திரைப்படம், செப்டம்பர் 4ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சுமார் எட்டு வாரங்களுக்குப் பிறகு ஓடிடி தளத்திற்கு வருகிறது. தீபாவளிக்கு முந்தைய வாரமான நாளை (அக்.,30) SonyLIV தளத்தில் வெளியாகிறது.
சிக்மா
முதல்வர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் முதல்முறையாக இயக்குநராக அறிமுகமான படம் சிக்மா. இந்தப் படத்தில் சுந்தீப் கிஷன் நடித்துள்ளார். தமிழ் ஆக்ஷன்-அட்வென்ச்சர் திரைப்படமான சிக்மா, நாளை Netflix தளத்தில் வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் ஒளிபரப்பப்படும்.

அக்கா (Akka)
இயக்குநர் தர்மராஜ் ஷெட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள அக்கா வெப் தொடரின் டிரெய்லர் நல்ல வரவேற்பை பெற்றது. 1980-களின் பின்னணியில் அமைக்கப்பட்ட அக்கா, ‘பெர்னூரு’ என்ற கற்பனையான ஊரில் நடக்கும் குற்றப் பின்னணி நாடகமாகும். அங்குள்ள பெண்களின் குற்றக் கும்பலை மையமாகக் கொண்டது இக்கதை. கீர்த்தி சுரேஷ் ‘பவானி’ என்ற கதாபாத்திரத்திலும், ராதிகா ஆப்தே ‘ருத்ரா’ என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இந்த வெப் தொடர் நெட்பிளிக்ஸில் நாளை வெளியாகிறது.

பாத்தா
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் மற்றும் மாஸ்டர் சாய் பிரித்விராஜ் நடித்துள்ள தமிழ் ஆக்ஷன்-காமெடி திரைப்படம் பாத்தா. சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த அக்டோபர் 1ம் தேதி தியேட்டர்களில் வெளியாகியது. இந்தப் படம் இன்று Netflix-ல் வெளியானது. தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.
6. ஏ கப்புள் ஆஃப் லைஸ் (A Couple of Lies)
ஸ்டீபன் ஆன்ஹெமின் நாவலை அடிப்படையாகக் கொண்ட இந்த நான்கு பாக ஸ்வீடிஷ் உளவியல் த்ரில்லர் தொடர், தங்களின் விரிசலடைந்த திருமண வாழ்க்கையைக் காப்பாற்ற ஸ்டாக்ஹோம் மற்றும் சிசிலியில் உள்ள தங்களது ஆடம்பர வீடுகளை மாற்றிக் கொள்ளும் இரு பணக்கார தம்பதிகளைப் பற்றியது. இருப்பினும், அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களையும் அதிர்ச்சியளிக்கும் ரகசியங்களையும் கண்டறியும்போது அவர்களின் புதிய தொடக்கம் பயங்கரமாக மாறுகிறது.
நாக்கடர்ன்
பிரபல ஸ்வீடிஷ் எழுத்தாளர் லார்ஸ் கெப்ளர் எழுதிய தி சான்ட்மன் மற்றும் லாசரஸ் ஆகிய நாவல்களை அடிப்படையாகக் ஸ்வீடிஷ் உளவியல் த்ரில்லர் தொடராகும். லீவ் ஷ்ரைபர், ஜாசி பீட்ஸ், ஸ்டீபன் கிரஹாம் மற்றும் ரோரி கல்கின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தொடர் கொலைகாரன் சிறையில் அடைக்கப்பட்ட பிறகும், அவனது பழைய பாணியில் மீண்டும் கடத்தல்களும் கொலைகளும் நடக்கின்றன. இந்த வழக்கை ஓய்வுபெற்ற துப்பறியும் அதிகாரி விசாரிக்கிறார். அவரது விசாரணையும், ரகசியங்களையும் கண்டறிகின்றனர்.. இந்த வெப் தொடரின் முதல் பாகம் நாளை வெளியாகிறது. மொத்தம் பத்து எபிஷேட்களைக் கொண்ட இந்த் தொடர், நாளை முதல் வாரம் ஒரு பாகம் என டிசம்பர் 25 வரை வெளியாக இருக்கிறது.
அவராச்சன் & சன்ஸ் (Avaraachan & Sons)
அமல் ஷீலா தம்பி இயக்கத்தில் பிஜு மேனன், ஸ்ரீநாத் பாசி, கணபதி, வினய் ஃபார்ட் மற்றும் கிரேஸ் ஆண்டனி நடித்துள்ள மலையாள குடும்ப நகைச்சுவை திரைப்படம் அவராச்சன் & சன்ஸ். இப்படம் கடந்த அக்.,1ம் தேதி தியேட்டர்களில் வெளியானது. சரியாக 30 நாளுக்குப் பிறகு, நாளை Netflix-ல் வெளியாகிறது. இது ஒரு பாரம்பரிய குடும்பத்திற்குள் நடக்கும் நகைச்சுவையான மற்றும் குழப்பமான உறவுகளைப் பற்றிய கதையாகும்.

மீதே மே க்யா ஹை (Meethe Mein Kya Hai)
ராதிகா பன்சால் இயக்கத்தில் உருவான படம் மீதே மே க்யா ஹை. ரோகினி ஹட்டங்கடி, ரித்விக் பவுமிக், ஆயிஷா ரசா மிஸ்ரா, தாரணா ராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பல தலைமுறைகளாக வாழும் ஒரு குடும்பத்தின் மறைக்கப்பட்ட ரகசியங்கள் மற்றும் தீர்க்கப்படாத பிரச்சனைகளைக் கையாளும் ஒரு குடும்ப நாடகமாகும். தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்களுக்காகக் குடும்பத்தினர் ஒன்றுகூடும் வேளையில், எதிர்பாராத திருமண அறிவிப்பு ஒன்று அவர்களின் சிக்கலான உறவுகளை வெளிக்கொண்டு வருகிறது. இந்தப் படம் நாளை Netflixல் வெளியாகிறது.
தி ஒன் அபௌட் மேத்யூ பெர்ரி (The One About Matthew Perry)
தி ஒன் அபௌட் மேத்யூ பெர்ரி ஆவணப்படத் தொடர் கடந்த அக்டோபர் 27ல் Netflix-ல் வெளியானது. மூன்று பாகங்களைக் கொண்ட இந்த ஆவணப்படம், மறைந்த ‘ஃப்ரெண்ட்ஸ்’ தொடரின் புகழ்பெற்ற நடிகர் மேத்யூ பெர்ரியின் வளர்ச்சி, அவரது பிற பணிகள் மற்றும் போதைப்பழக்கத்திற்கு எதிரான அவரது நீண்ட போராட்டத்தை விவரிக்கிறது. இதில் அவரது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்களின் தனிப்பட்ட நேர்காணல்களும், இதுவரை வெளிவராத வீடியோக்களும் இடம் பெற்றுள்ளன.






