கோவையில் மகளிர் திட்டத்தில் வேலைவாய்ப்பு! – நவம்பர் 13 கடைசி நாள்!

கோவை: கோவை மாவட்ட மகளிர் திட்டத்தின் கீழ், மாவட்ட வளப் பயிற்றுநர் (பண்ணை சாரா) பணியிடத்தை நிரப்புவதற்குத் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்தப் பணியிடத்துக்கு விண்ணப்பிப்பவர்கள் எம்.பி.ஏ., எம்.எஸ்.டபிள்யூ. உள்ளிட்ட முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களின் வயது 30 முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும், தொழில் முனைவோர் மேம்பாடு, அரசு திட்டங்கள், தன்னார்வ அமைப்புகள் அல்லது தனியார் நிறுவனங்களில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியம்.

Advertisement

இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களது கல்விச் சான்றிதழ்கள் மற்றும் பணி அனுபவச் சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நவம்பர் 13ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை, செயலாளர், கோயம்புத்தூர் மாவட்ட மகமை, வட்டார வளர்ச்சி அலுவலகம், மதுக்கரை என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும், makamaikovai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம்.

Advertisement

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பித்து இந்த வேலைவாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Amazon Link 3
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

வீட்டுல வளர்க்கிற சேவல்களுக்கும் பாதுகாப்பு இல்லையா? கோவையில் வெளியான சிசிடிவி காட்சிகள்!

கோவை மேட்டுப்பாளையம் சாலை கோட்டை பிரிவு பகுதியில் வீடுகள் மற்றும் தோட்டங்களில் வளர்க்கப்படும் சேவல்கள் திருடப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.

Video

கோவில்பாளையத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் திருட முயற்சி – சிசிடிவி கேமராவை ஸ்ப்ரே அடித்து மறைத்த மர்ம நபர்…

கோவை: கோவில்பாளையம் பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், கோவில்பாளையம் பகுதியில் உள்ள தனியார் ஏடிஎம் மையத்தில் திருட முயன்ற மர்ம நபர்,...