மழைநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை- கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு…

கோவை: கோவையில் மழைநீர் தேங்குவதைத் தடுக்கும் நடவடிக்கையாக உக்கடம், லாரிப்பேட்டை பகுதியில் மாநகராட்சி ஆணையாளர் நேரில் ஆய்வு செய்தார்.

கோவையில் வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு மழைநீர் தேங்குவதைத் தடுக்கும் வகையில் மாநகராட்சி சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Advertisement

இதன் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சியின் தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட 86-வது வார்டு உக்கடம், லாரிப்பேட்டை பகுதியில் மழைநீர் வடிகால் மற்றும் மழைநீர் தேங்குவதைத் தடுக்கும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் கட்டாரவி தேஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு மாநகராட்சி பகுதிகளில் இரவு, பகலாக மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படாத வகையில் மழைநீர் தேங்குவதைத் தடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Advertisement

ஆய்வின்போது, மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் அறிவுறுத்தினார். மேலும், பொதுமக்கள் தங்கள் வீடுகளில் குப்பைகளை பொது இடங்களில் கொட்டக்கூடாது என்றும், மழைக்காலம் என்பதால் பயன்படுத்தப்படாத பழைய டயர்கள், வாகன உதிரிபாகங்கள் உள்ளிட்ட தேவையற்ற பொருட்களை அகற்ற வேண்டும் என்றும் கடை உரிமையாளர்களிடம் கேட்டுக்கொண்டார்.

இந்த ஆய்வின்போது மாநகராட்சி துணை ஆணையாளர், மாநகர நல அலுவலர், உதவி ஆணையர்கள், பொறியாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Advertisement

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கார்த்திகையும்… ஐயப்ப விரதமும்… பத்கர்கள் மாலை அணிந்து சபரிமலை செல்வது ஏன்?

கோவை: கார்த்திகை 1ம் தேதி பிறந்துள்ள நிலையில், ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து, விரதம் இருப்பது ஏன்? அதற்கான காரணங்கள் என்னென்ன? என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம். தமிழ் மாதங்களில் மிகவும்...

Video

கோவையில் வீட்டை உடைத்த காட்டுயானை- வீடியோ காட்சிகள்…

கோவை: கதிர்நாயக்கன்பாளையத்தில் காட்டு யானை வீட்டை சேதப்படுத்திய காட்சி வெளியாகி உள்ளது. கோவை மாவட்டத்தில் வனவிலங்குகள் நடமாட்டம் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் அதிக அளவு உள்ளது. அடிக்கடி வனப்பகுதியில் இருந்து...