கோவை மாவட்டத்தில் குழந்தைகள் தின விழா: 8 இடங்களில் 424 மாணவர்கள் பங்கேற்பு…

கோவை: குழந்தைகள் தினத்தை முன்னிட்டு கோவை மாவட்ட காவல்துறையின் சார்பில், மாவட்டம் முழுவதும் 8 இடங்களில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் 424 மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான குழந்தைகள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் ரெட்டி உத்தரவின்பேரில், மாவட்ட காவல்துறையின் கீழ் செயல்பட்டு வரும் பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ் கிளப் சார்பில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.

Advertisement

இதன் ஒரு பகுதியாக பெரியநாயக்கன்பாளையம், பேரூர் சுண்டக்காமுத்தூர், கிணத்துக்கடவு, சூலூர், பொள்ளாச்சி கிழக்கு, பொள்ளாச்சி மேற்கு, ஆனைமலை மற்றும் மேட்டுப்பாளையம் ஆகிய 8 இடங்களில் பள்ளி மாணவ, மாணவிகளுக்குப் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் விளையாட்டுப் போட்டிகள், பேச்சுப்போட்டி, சிலம்பம், ஓவியம், கட்டுரை, சதுரங்கம் உள்ளிட்ட போட்டிகளும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இந்நிகழ்ச்சிகளில் மொத்தம் 424 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

Advertisement

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கோவை மாவட்ட காவல்துறை சார்பில் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றுகள் வழங்கப்பட்டன. குழந்தைகளின் திறமைகளை ஊக்குவிப்பதுடன், அவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

மாணவர்களின் நல்வாழ்வு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ் கிளப் மூலம் தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வு மற்றும் நலத்திட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

Advertisement

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கார்த்திகையும்… ஐயப்ப விரதமும்… பத்கர்கள் மாலை அணிந்து சபரிமலை செல்வது ஏன்?

கோவை: கார்த்திகை 1ம் தேதி பிறந்துள்ள நிலையில், ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து, விரதம் இருப்பது ஏன்? அதற்கான காரணங்கள் என்னென்ன? என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம். தமிழ் மாதங்களில் மிகவும்...

Video

கோவையில் வீட்டை உடைத்த காட்டுயானை- வீடியோ காட்சிகள்…

கோவை: கதிர்நாயக்கன்பாளையத்தில் காட்டு யானை வீட்டை சேதப்படுத்திய காட்சி வெளியாகி உள்ளது. கோவை மாவட்டத்தில் வனவிலங்குகள் நடமாட்டம் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் அதிக அளவு உள்ளது. அடிக்கடி வனப்பகுதியில் இருந்து...