கால்நடை வளர்ப்பில் ஈடுபடும் மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களுக்கு ரூ.5,000 சிறப்பு ஊக்கத்தொகை– கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…

கோவை: கோவை மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பில் ஈடுபடும் மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், 2026–2027ஆம் நிதியாண்டில் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கால்நடை வளர்ப்பில் ஈடுபடும் மகளிரை ஊக்குவித்து, அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.

Advertisement

இத்திட்டத்தில் பயன்பெற, அங்கீகரிக்கப்பட்ட மகளிர் சுயஉதவிக் குழுவில் உறுப்பினராக இருக்க வேண்டும். மேலும், உள்நாட்டு மாட்டு இனங்களான காங்கேயம், உம்பளாச்சேரி, புலிக்குளம், பர்கூர், ஆலம்பாடி மற்றும் தோடா எருமை ஆகியவற்றில் ஏதேனும் ஓர் இனத்தை வளர்ப்பதில் ஈடுபட்டிருக்க வேண்டும்.

பயனாளிகள் நேரடி பயனாளர் பரிமாற்றம் (DBT) மூலம் உதவித்தொகை பெறுவதற்கான வங்கிக் கணக்கு வைத்திருக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்திற்கு ஒருமுறை மட்டுமே உதவித்தொகை வழங்கப்படும்.

Advertisement

தேர்வு செய்யப்படும் பயனாளிகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 30 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்படும்.

தகுதியான பயனாளிகளுக்கு நேரடி பயனாளர் பரிமாற்றம் (DBT) முறையில் தலா ரூ.5,000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள், அருகிலுள்ள கால்நடை மருத்துவமனை மற்றும் கால்நடை மருந்தகங்களை அணுகி விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கார்த்திகையும்… ஐயப்ப விரதமும்… பத்கர்கள் மாலை அணிந்து சபரிமலை செல்வது ஏன்?

கோவை: கார்த்திகை 1ம் தேதி பிறந்துள்ள நிலையில், ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து, விரதம் இருப்பது ஏன்? அதற்கான காரணங்கள் என்னென்ன? என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம். தமிழ் மாதங்களில் மிகவும்...

Video

கோவையில் வீட்டை உடைத்த காட்டுயானை- வீடியோ காட்சிகள்…

கோவை: கதிர்நாயக்கன்பாளையத்தில் காட்டு யானை வீட்டை சேதப்படுத்திய காட்சி வெளியாகி உள்ளது. கோவை மாவட்டத்தில் வனவிலங்குகள் நடமாட்டம் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் அதிக அளவு உள்ளது. அடிக்கடி வனப்பகுதியில் இருந்து...