கோவை: மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ் மதுக்கரை பிரதான சாலையில், சுந்தராபுரம் முதல் மாநகராட்சி எல்லை வரை மைய திட்டு விளக்கு அமைக்கும் பணியினை துவக்கி வைத்தார்.
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ், கோயம்புத்தூர் மாநகராட்சி, தெற்கு மண்டலத்திற்குட்பட்ட மதுக்கரை பிரதான சாலையில், சுந்தராபுரம் முதல் மாநகராட்சி எல்லை வரை மாநகராட்சி பொதுநிதியின் கீழ் ரூ.1.60 கோடி மதிப்பீட்டில், மைய திட்டு விளக்கு அமைக்கும் பணியினை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் துவக்கி வைத்தார்.
கோயம்புத்தூர் மாநகராட்சி, தெற்கு மண்டலம், வார்டு எண்கள். 94, 96, 97க்குப்பட்ட மதுக்கரை பிரதான சாலையில், சுந்தராபுரம் முதல் மாநகராட்சி எல்லை வரை மாநகராட்சி பொதுநிதியின் கீழ் ரூ.160 கோடி மதிப்பீட்டில், 195 எண்ணிக்கையிலான தெரு விளக்கு கம்பங்கள் மற்றும் 60 எண்ணிக்கையிலான ஒரு பக்க மின்விளக்குகளும்,
270 இருபக்க மின்விளக்குகளும் என மொத்தம் 330 எண்ணிக்கையிலான 120 வாட்ஸ் திறன் கொண்ட மைய திட்டு மின் விளக்குகள் அமைக்கும் பணியினை அமைச்சர் விக்னேஷ் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், துணை ஆணையாளர் குமரேசன், உதவி ஆணையர் முத்துசாமி, செயற்பொறியாளர் ஜாக்குலின் ஜாய் லதா, உதவி செயற்பொறியாளர் கனகராஜ் மண்டல சுகாதார அலுவலர் ஆண்டியப்பன், உதவி பொறியாளர்கள் சபரிராஜ், இந்திராகாந்தி, ஜெகதீஸ்வரி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.




