கோவையில் ஐயப்ப பக்தர்கள் விரதத்தை துவக்கினர்…

கோவை: கார்த்திகை மாதம் துவங்கிய நிலையில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை துவக்கினர்.

கோவை சித்தாப்புதூர், கருமத்தம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஐயப்பன் கோயிலில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.

Advertisement

சபரிமலை மண்டல பூஜை மற்றும் மகரஜோதி தரிசனத்திற்காகச் செல்லும் ஐயப்ப பக்தர்கள், கார்த்திகை மாதம் முதல் நாளில் மாலை அணிந்து விரதம் தொடங்குவது வழக்கம். அதன்படி, இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் விரதத்தை துவக்கி வருகின்றனர்.

கோவை காந்திபுரம் அடுத்த சித்தாப்புதூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மணிகண்டன் சுவாமி திருக்கோயிலில், கார்த்திகை மாதம் முதல் நாளை முன்னிட்டு ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து சபரிமலை யாத்திரைக்கான விரதத்தைத் தொடங்கினர்.

Advertisement

அவர்கள் குருசாமிகள் முன்னிலையில் துளசி மற்றும் ருத்ராட்ச மாலைகளை அணிந்து விரதத்தைத் தொடங்கினர். இதில் முதன்முறையாக சபரிமலைக்குச் செல்லும் கன்னிசாமிகள் மற்றும் ஏற்கெனவே சபரிமலைக்குச் சென்று வரும் பக்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதனை முன்னிட்டு கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. மேலும், கோயில் வளாகம் மலர்கள் மற்றும் தீபங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பக்தர்கள் சரண கோஷம் எழுப்பி வழிபாட்டில் ஈடுபட்டனர்.

Advertisement

இதே போன்ற கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள ஐயப்ப பீடத்திலும் மாலை அணிந்து பக்தர்கள் விரதத்தை துவக்கினர்.

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கார்த்திகையும்… ஐயப்ப விரதமும்… பத்கர்கள் மாலை அணிந்து சபரிமலை செல்வது ஏன்?

கோவை: கார்த்திகை 1ம் தேதி பிறந்துள்ள நிலையில், ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து, விரதம் இருப்பது ஏன்? அதற்கான காரணங்கள் என்னென்ன? என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம். தமிழ் மாதங்களில் மிகவும்...

Video

கோவையில் வீட்டை உடைத்த காட்டுயானை- வீடியோ காட்சிகள்…

கோவை: கதிர்நாயக்கன்பாளையத்தில் காட்டு யானை வீட்டை சேதப்படுத்திய காட்சி வெளியாகி உள்ளது. கோவை மாவட்டத்தில் வனவிலங்குகள் நடமாட்டம் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் அதிக அளவு உள்ளது. அடிக்கடி வனப்பகுதியில் இருந்து...