கோவையில் எரிபொருள் நிரப்ப சென்ற ஆட்டோ ஓட்டுநருக்கு நேர்ந்த சோகம்…

கோவை: பெட்ரோல் பங்க் டேங்க் மூடி வெடித்து சிதறியதில் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்தார்.

கோவை கவுண்டம்பாளையம் அருகே உரிய பாதுகாப்பு இன்றி பெட்ரோல் பங்கில் நிலத்தடி டேங்க் அமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்த நிலையில் டேங்க் வெடித்து சி என் ஜி கேஸ் நிரப்புவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த அப்பாவி ஆட்டோ ஓட்டுநர் தலை சிதறி உயிரிழந்த பரிதாப சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

கோவை கணபதி பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்பவருக்கு சொந்தமான இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் ஒன்று கோவை மேட்டுப்பாளையம் சாலை எரு கம்பெனி சந்திப்பு பகுதியில் இயங்கி வருகிறது. இந்த நிலையில் அங்கு புதிதாக பெட்ரோல் டேங்க் ஒன்று கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அங்கு அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு தினங்களாக அந்த டேங்கில் பெட்ரோல் நிரப்பி வாகனங்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வந்து உள்ளது. ஆனால் ஒரு புறம் இந்தப் பணிகள் நடைபெற்று வந்தாலும் மறுபுறம் உரிய பாதுகாப்பு இன்றி வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பும் பணியிலும் அதன் ஊழியர்கள் ஈடுபட்டு வந்து உள்ளனர்.

இதன் இடையே நேற்று பிற்பகல் வாகனங்களுக்கு சி என் ஜி எரிவாயு நிரப்புவதற்காக ஆட்டோக்கள் மற்றும் கார்கள் பெட்ரோல் பங்க் வளாகத்தில் நீண்ட வரிசையில் நின்று கொண்டு இருந்த போது பெட்ரோல் பங்க் மேலாளர் தனபால் அறிவுறுத்தலின் பேரில் ஊழியர்கள் புதிதாக அமைக்கப்பட்டு இருந்த பெட்ரோல் டேங்கில் பெட்ரோல் பம்ப் மூடியை பொருத்தி உள்ளனர்.

அப்போது பெட்ரோல் பம்ப் குழாயில் இருந்த பெட்ரோல், புதிதாக அமைக்கப்பட்டு இருந்த காலி டேங்கருக்குள் செல்லவே அதீத அழுத்தம் காரணமாக பெட்ரோல் டேங்கின் மூடி சிதறி அங்கு வரிசையில் கேஸ் நிரப்புவதற்காக தனது ஆட்டோவில் காத்து இருந்த கோவை, பீளமேடு பகுதியைச் சேர்ந்த கன்னிமுத்து என்ற ஆட்டோ ஓட்டுநரின் தலையில் பலமாக மோதி உள்ளது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த முத்துசாமி அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து துடி துடித்து உயிரிழந்தார்.

கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இந்த கோர சம்பவத்தை கண்ட சக வாகன ஓட்டிகள் அங்கிருந்து அலறி அடித்து ஓடியதுடன் சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் அங்கு விரைந்து சென்ற காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் அங்கிருந்த வாகனங்கள் அனைத்தையும் அப்புறப்படுத்தியதுடன் உயிரிழந்த கன்னிமுத்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் உரிய பாதுகாப்பு இன்றி பணியாற்றி அப்பாவி ஆட்டோ ஓட்டுனரின் உயிரிழப்புக்கு காரணமான பெட்ரோல் பங்க் உரிமையாளர் சந்தோஷ், மேலாளர் தனபால்,மற்றும் ஊழியர்கள் அஜித் குமார், ராஜசேகர்,அகஸ்டின், அஜித் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து உள்ள கவுண்டம்பாளையம் காவல் நிலைய போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள பெட்ரோல் பங்க் உரிமையாளர் சந்தோஷ் என்பவரை தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் கோவையில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Video

கோவையில் வீட்டை உடைத்த காட்டுயானை- வீடியோ காட்சிகள்…

கோவை: கதிர்நாயக்கன்பாளையத்தில் காட்டு யானை வீட்டை சேதப்படுத்திய காட்சி வெளியாகி உள்ளது. கோவை மாவட்டத்தில் வனவிலங்குகள் நடமாட்டம் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் அதிக அளவு உள்ளது. அடிக்கடி வனப்பகுதியில் இருந்து...