கோவையில் ரூ.18.21 கோடி மதிப்பில் 117 வளர்ச்சிப் பணிகள் – விரைவில் பணிகள் தொடங்க மாநகராட்சி திட்டம்

கோவை: கோவை மாநகராட்சியில் ரூ.18.21 கோடி மதிப்பில் 117 வளர்ச்சிப் பணிகள் தொடங்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட ஐந்து மண்டலங்களிலும் சாலை, பள்ளி வகுப்பறைகள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் பூங்காக்கள் உள்ளிட்ட அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.18.21 கோடி மதிப்பீட்டில் 117 வளர்ச்சிப் பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கோவை மாநகராட்சியின் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட வார்டுகளில் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளன.

அதன்படி, முதலமைச்சரின் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.9.73 கோடி மதிப்பீட்டில் 17.31 கி.மீ. நீளத்திற்கு 96 தார் சாலைகளைப் புதுப்பிக்கவும், மாநில நிதிக்குழு நகர்ப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.4.15 கோடி மதிப்பீட்டில் 3.19 கி.மீ. நீளத்திற்கு 9 சாலைப் பணிகளை மேற்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும், மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவர்களுக்குத் தேவையான வகுப்பறை வசதிகளை மேம்படுத்தவும், ஏற்கெனவே உள்ள வகுப்பறைகளைச் சீரமைக்கவும் ரூ.2.61 கோடி மதிப்பீட்டில் 5 பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதேபோல், குழந்தைகளின் ஆரம்பகால பராமரிப்பு மற்றும் முன்பருவக் கல்விக்கான வசதிகளை மேம்படுத்தும் வகையில் ரூ.64.50 லட்சம் மதிப்பீட்டில் 3 அங்கன்வாடி மையங்களுக்கு புதிய கட்டடங்கள் அமைத்தல் மற்றும் மறுகட்டுமானப் பணிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதுதவிர, மாநகராட்சிப் பகுதிகளில் பசுமைப் பரப்பை அதிகரித்து, பொதுமக்களுக்கு நடைப்பயிற்சி மற்றும் பொழுதுபோக்கு வசதிகளை ஏற்படுத்தும் நோக்கில், முதலமைச்சரின் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1.08 கோடி மதிப்பீட்டில் 4 பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன.

இவ்வாறு சாலைகள், பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் பூங்காக்கள் என மொத்தம் ரூ.18.21 கோடி மதிப்பீட்டில் 117 பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கைகள் தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அரசின் நிர்வாக அனுமதி கிடைத்ததும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Coimbatore Power Cut | கோவையில் நாளை (25.11.2026) மின்தடை ஏற்படும் பகுதிகள்!

நாளை (நவம்பர் 25) கோவையில் கீழே குறிப்பிட்ட துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், அவற்றுக்கு உட்பட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

Video

கோவையில் வீட்டை உடைத்த காட்டுயானை- வீடியோ காட்சிகள்…

கோவை: கதிர்நாயக்கன்பாளையத்தில் காட்டு யானை வீட்டை சேதப்படுத்திய காட்சி வெளியாகி உள்ளது. கோவை மாவட்டத்தில் வனவிலங்குகள் நடமாட்டம் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் அதிக அளவு உள்ளது. அடிக்கடி வனப்பகுதியில் இருந்து...