கோவை அறிவியல் மையத்தில் ‘சூப்பர்மூன்’ – ஆர்வத்துடன் கண்டு ரசித்த மாணவர்கள், பொதுமக்கள்!

கோவை: கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற ‘சூப்பர்மூன்’ காணும் சிறப்பு நிகழ்வில், மாணவர்களும் பொதுமக்களும் வழக்கத்தைவிட சற்றுப் பெரிதாகவும் பிரகாசமாகவும் காட்சியளித்த முழு நிலவை ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே வானியல் குறித்த ஆர்வத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் வகையில், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கோவை மாவட்டக் கிளையும், தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறையின் கீழ் இயங்கும் கோவை மண்டல அறிவியல் மையமும் இணைந்து இந்நிகழ்வை நடத்தின. அறிவியல் மைய வளாகத்தில் மாலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கோவை மாவட்டத் தலைவர் பேராசிரியர் பிரபாகரன், “நிலவு தனது நீள்வட்டப் பாதையில் பூமிக்கு மிக அருகில் இருக்கும் நேரத்தில் முழு நிலவு தோன்றும்போது, அது வழக்கத்தைவிட சற்றுப் பெரிதாகவும் பிரகாசமாகவும் தெரியும்.

இதுவே ‘சூப்பர்மூன்’ எனப்படுகிறது. இதுபோன்ற வானியல் நிகழ்வுகளை நேரில் பார்ப்பதன் மூலம் மூடநம்பிக்கைகள் நீங்கி, மாணவர்களிடம் அறிவியல் மனப்பான்மை வளரும்” என்றார்.

Advertisement

கோவை மண்டல அறிவியல் மையத்தின் புதுமைகாண் மைய அலுவலர் லெனின் பாரதி பேசுகையில், சூப்பர்மூன் தோன்றுவதற்கான அறிவியல் காரணங்களும், நிலவு பூமியைச் சுற்றி வரும் விதமும் மாணவர்களுக்கு எளிமையாக விளக்கப்பட்டதாகக் கூறினார்.

Also Read: கோவை மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கார்த்திகை மகா தீபம் ஏற்றம் – அரோகரா முழக்கத்துடன் பக்தர்கள் வழிபாடு!

இதுபோன்ற நிகழ்வுகள் மாணவர்களின் ஆராய்ச்சி ஆர்வத்தைத் தூண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் கோவை மண்டல அறிவியல் மைய அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் அறிவியல் ஆர்வலர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Amazon Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

பேரூரில் மக்கள் தொடர்பு முகாம்- 192 பயனாளிகளுக்கு 2.55 கோடி நலத்திட்ட உதவிகள்…

கோவை: கோவை பேரூரில் மக்கள் தொடர்பு முகாமில் 192 பயனாளிகளுக்கு ரூ.2.55 கோடி நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார். கோவை மாவட்டம், பேரூர் வட்டம் தத்தியாலையம் பகுதியில் உள்ள லோட்டன் மஹாலில் நடைபெற்ற மக்கள்...

Video

கோவையில் வீட்டை உடைத்த காட்டுயானை- வீடியோ காட்சிகள்…

கோவை: கதிர்நாயக்கன்பாளையத்தில் காட்டு யானை வீட்டை சேதப்படுத்திய காட்சி வெளியாகி உள்ளது. கோவை மாவட்டத்தில் வனவிலங்குகள் நடமாட்டம் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் அதிக அளவு உள்ளது. அடிக்கடி வனப்பகுதியில் இருந்து...