கோவையில் 50 இணைகளுக்கு டும்… டும்…டும்…

கோவை: கோவையில் 50 இணைகளுக்கு ஒரே மேடையில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது…

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கோவையில் 50 ஜோடிகளுக்கு சீர் வரிசைகளுடன் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் இன்று தமிழகம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட தம்பதிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. அரை பவுன் தாலி உட்பட பல்வேறு சீர்வரிசைகள் அறநிலையத்துறையால் வழங்கப்பட்டு திருமணம் நடைபெற்றது.

புதுமண தம்பதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தி இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து பேசினார்.

அதன்படி கோவையில் உக்கடம் பகுதியில் உள்ள இலட்சுமி நரசிம்மர் சுவாமி கோவிலில் 50 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இதில் சிரவை ஆதீனம், மாநகராட்சி துணை மேயர் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், மணமக்களின் உறவினர்கள் கோவிலுக்கு வந்திருந்த மக்கள் அனைவரும்
மணமக்களை வாழ்த்தினர்.

அதனைத் தொடர்ந்து புதுமண தம்பதிகளுக்கு கட்டில் பீரோ மெத்தை உட்பட பல்வேறு சீர்வரிசைகள் வழங்கப்பட்டது.

இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் சீர்வரிசைகளுடன் திருமணம் நடைபெற்றது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தமிழக அரசுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாகவும் புதுமண தம்பதிகள் தெரிவித்தனர்.

மேலும் புதுமண தம்பதிகளின் உறவினர்களும் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையே அனைத்து செலவுகளையும் ஏற்று திருமணம் செய்து வைத்தது எங்கள் குடும்பத்திற்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தனர்.

கோவிலில் ஒரே மேடையில் 50 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது கோவிலுக்கு வந்திருந்த அனைவருக்கும் மகிழ்ச்சியை அளித்தது. மேலும் கோவிலில் சாமியை தரிசனம் செய்ய வந்த முதியவர்களும் புதுமண தம்பதிகளை வாழ்த்தி சென்றனர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு…

கோவை: மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தியத் தேர்தல் ஆணையத்தால் சட்டமன்ற பொதுத்தேர்தல், 2026 அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட பத்து சட்டமன்ற...

Video

கோவையில் ஒருவரை தாக்குவதற்கு துரத்திய காட்டுயானை- சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவை கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் காட்டு யானை ஒருவரை தாக்குவதற்காக விரட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலை கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் ஒற்றைக் காட்டுயானை அட்டகாசம் அதிகமாக...